சொல் வரிசை - 88 புதிருக்காக, கீழே ஏழு (7) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. தாம்பத்யம் ( --- --- --- --- ஸ்ருதியோடு லயம் சேர்ந்தது)
2. மோகம் முப்பது வருஷம் (--- --- --- சந்தோஷம் சம்சாரம் இல்லாமலா)
3. ரெண்டு (--- --- --- இல்லை காதலியா)
4. பேரும் புகழும் (--- --- --- தலை முழுகாமல் இருக்கின்றாய்)
5. ஜென்டில்மேன் (--- --- --- --- --- என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்)
6. கோபுர வாசலிலே (--- --- --- --- --- காமன் கலைகளில் பிறந்திடும் ராகம்)
7. கோயில் புறா (--- --- --- --- --- நிலவு நீ கதிரும் நீ அடிமை நான் தினமும் ஓதும்)
5. ஜென்டில்மேன் (--- --- --- --- --- என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்)
6. கோபுர வாசலிலே (--- --- --- --- --- காமன் கலைகளில் பிறந்திடும் ராகம்)
7. கோயில் புறா (--- --- --- --- --- நிலவு நீ கதிரும் நீ அடிமை நான் தினமும் ஓதும்)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
1. தாம்பத்யம் - கீதம் வந்தது சங்கீதம் வந்தது
ReplyDelete2. மோகம் முப்பது வருஷம் - சங்கீதம் ராகங்கள் இல்லாமலா
3. ரெண்டு - நீ என் தோழியா
4. பேரும் புகழும் - தானே தனக்குள் சிரிக்கின்றாய்
5. ஜென்டில்மேன் - என் வீட்டுத் தோட்டத்தின் பூவெல்லாம் கேட்டுப் பார்
6. கோபுர வாசலிலே - காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
7. கோயில் புறா - வேதம் நீ இனிய நாதம் நீ
இறுதி விடை :
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்
- கொக்கரக்கோ