Saturday, November 29, 2014

எழுத்துப் படிகள் - 87



எழுத்துப் படிகள் - 87 க்கான அனைத்து திரைப்படங்களும்   எம்.ஜி.ஆர்  நடித்தவை.   ஆனால்  இறுதி விடைக்கான திரைப்படம்   (8) சிவாஜி கணேசன் கதாநாயகனாக  நடித்தது. 
 
எழுத்துப் படிகள் - 87 க்கான திரைப்படங்களின் பெயர்கள் 
 
1.       ஆயிரத்தில் ஒருவன்                                               
2.       மன்னாதி மன்னன்                                                
3.       காவல்காரன்                                             
4.       தர்மம் தலை காக்கும்                                               
5.       மாடப்புறா

6.       நீதிக்கு தலை வணங்கு                     
7.       தலைவன்
8.       தனிப்பிறவி    
           
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  8-வது படத்தின்  8-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 
 
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்
 
குறிப்பு:  
 
1.    விடைக்கான திரைப்படத்தின் முதல் எழுத்து :   " த "
                                  
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும் 

ராமராவ் 

Saturday, November 22, 2014

எழுத்துப் படிகள் - 86


எழுத்துப் படிகள் - 86 க்கான அனைத்து திரைப்படங்களும்  சிவாஜி கணேசன் நடித்தவை.   ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்   (7) எம்.ஜி.ஆர் கதாநாயகனாக  நடித்தது. 
 
எழுத்துப் படிகள் - 86 க்கான திரைப்படங்களின் பெயர்கள் 
 
1.       திருவிளையாடல்                                              
2.       பொம்மை கல்யாணம்                                               
3.       எமனுக்கு எமன்                                            
4.       உனக்காக நான்                                              
5.       பாட்டும் பரதமும்                  

6.       திரிசூலம்  
7.       ராஜபக்தி     
           
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  7-வது படத்தின்  7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 
 
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்
 
குறிப்பு:  
 
1.    விடைக்கான திரைப்படத்தின் முதல் எழுத்து :   " உ "
                                  
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும் 

ராமராவ் 

Sunday, November 16, 2014

சொல் வரிசை - 73


சொல் வரிசை - 73  புதிருக்காக, கீழே   6  (ஆறு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.   நிச்சய தாம்பூலம் (--- --- --- --- --- வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலைகள் வளர்த்தானே)
2.   ஆயுசு நூறு (--- --- --- வண்ணஜாலம் என்ன பாவை மேனி அது) 
3.   நான் பாடும் பாடல் (--- --- --- --- ராகம் பாடும் நேரம் என்று)
4.   அன்னமிட்ட கை (--- --- --- --- தாலாட்டு பாடுகிறேன் தாயாகவில்லையம்மா)
5.   நாம் மூவர் (--- --- --- ஒரு வாலிபன் தொடலாமா) 
6.   போடிநாயக்கனூர் கணேசன் (--- --- --- கொட்டுதடி கோடை மழை) 
 
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து,  அவற்றில் முதல் சொற்களை மட்டும்  வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
 
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
 
குறிப்பு:  பாடல் இடம் பெற்ற திரைப்படத்தில் முத்துராமனும் மஞ்சுளாவும் நடித்திருந்தார்கள்.   
 
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.