சொல் அந்தாதி - 96 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
1. சாரங்க தாரா - கண்களால் காதல்
3. ஓடி விளையாடு பாப்பா
4. நம்ம வீட்டு லட்சுமி
5. உத்தமி (1943)
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது, திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது, திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://www.google.com
ராமராவ்
1. சாரங்க தாரா - கண்களால் காதல் காவியம்
ReplyDelete2. மல்லியம் மங்களம் - ஓவியம் சிரிக்குது அது உள்ளம் தன்னை மயக்குது
3. ஓடி விளையாடு பாப்பா - ஜோரா சிரிக்குது வெள்ளிப் பணம்
4. நம்ம வீட்டு லட்சுமி - பணம் இருந்தால் போதுமடா மடியிலே
5. உத்தமி (1943) - பணமே பிரதான தெய்வம்
1. சாரங்க தாரா - கண்களால் காதல் காவியம் .... ஓவியம்
ReplyDelete2. மல்லியம் மங்களம் ஓவியம் சிரிக்குது
3. ஓடி விளையாடு பாப்பா சிரிக்குது ஜோராய் வெள்ளி பணம்.
4. நம்ம வீட்டு லட்சுமி பணமிருந்தால் போதுமடா மடியிலே... பணமே
5. உத்தமி (1943) பணமே