சொல் அந்தாதி - 90 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
1. சாரதா - ஒருத்தி ஒருவனை நினைத்து
3. புதியவன்
4. நூல்வேலி
5. கன்னித்தாய்
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது, திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது, திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com
ராமராவ்
ReplyDelete1. சாரதா - ஒருத்தி ஒருவனை நினைத்து
2. கண்மணி ராஜா - காதல் விளையாட கட்டிலிடு கண்ணே
3. புதியவன் - கண்ணே கலர் கலரா தெரியுது
4. நூல்வேலி - நானா படுவது நானா
5. கன்னித்தாய் - மானாப் பொறந்தா காட்டுக்கு ராணி
- Madhav
திருமதி சுதா ரகுராமன் 22.3.2018 அன்று அனுப்பிய விடைகள்:
ReplyDelete1. சாரதா - ஒருத்தி ஒருவனை நினைத்து ......காதல்
2. கண்மணி ராஜா காதல் விளையாட...தொட்டிலிடு கண்ணே
3. புதியவன் கண்ணே கலர் கலரா...பாடுவது நீயா நானா
4. நூல்வேலி நானா பாடுவது நானா......இளவயது மானா
5. கன்னித்தாய் மானா பொறந்தா..........சோதனை தான்டி