சொல் வரிசை - 174 புதிருக்காக, கீழே எட்டு (8) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. நான் வளர்த்த தங்கை (--- --- --- --- கண்டு எதுவும் விளங்காமல் நின்றேன்)
2. சக்கரவர்த்தி திருமகள் (--- --- --- நாம் இணைந்தோம் இந்த நாளே)
3. கண்காட்சி (--- --- கண்காட்சி அது காவிய)
4. சரபம் (--- --- --- மாறும் பூவும் கூட மென்மை போகும்)
5. உதயா(--- --- --- மலையாளத்தில் கொஞ்சுறியே)
6. மரகதம் (--- --- --- பச்சை மலை வளரும் அருவியோரம்)
7. பொண்ணு ஊருக்கு புதுசு (--- --- --- --- அள்ளும் அழகே துள்ளும் ராகமே)
8. ஐந்தாம் படை (--- --- --- --- ருக்குமணி வண்டி வருது)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com
ராமராவ்
1. இன்ப முகம் ஒன்று கண்டேன்
ReplyDelete2. எல்லை இல்லாத இன்பத்திலே
3. காணும் கலையெல்லாம் கண்காட்சி
4. நேரம் வந்தால் யாவும் மாறும்
5. இனிக்கும் தமிழ் சுந்தரியே
6. மாலை மயங்குகின்ற நேரம்
7. சோலைக் குயிலே காலைக் கதிரே
8. ஓரம் போ ஓரம் போ
இறுதி விடை
இன்ப எல்லை காணும் நேரம்
இனிக்கும் மாலை சோலை ஓரம்
- இவன் அவனேதான்
by மாதவ்
திருமதி சுதா ரகுராமன் 10.01.2018 அன்று அனுப்பிய விடைகள்:
ReplyDelete1. நான் வளர்த்த தங்கை (இன்ப முகம் ஒன்று கண்டேன் கண்டு ...எதுவும் விளங்காமல் நின்றேன்)
2. சக்கரவர்த்தி திருமகள் (எல்லை இல்லாத இன்பத்தினாலே.. நாம் இணைந்தோம் இந்த நாளே)
3. கண்காட்சி (காணும் கலையெல்லாம்... கண்காட்சி அது காவிய)
4. சரபம் ( நேரம் வந்தால் யாவும் மாறும் ...பூவும் கூட மென்மை போகும்)
5. உதயா(இனிக்கும் தமிழ் சுந்தரியே ..மலையாளத்தில் கொஞ்சுறியே)
6. மரகதம் ( மாலை மயங்குகிற நேரம் ... பச்சை மலை வளரும் அருவியோரம்)
7. பொண்ணு ஊருக்கு புதுசு (சோலைக்குயிலே காலைக் கதிரே.அள்ளும் அழகே துள்ளும் ராகமே)
8. ஐந்தாம் படை (ஓரம் போ .. ஓரம் போ ருக்குமணி வண்டி வருது)
இன்ப எல்லை காணும் நேரம்
இனிக்கும் மாலை சோலை ஓரம்
படம்: இவன் அவனேதான்
பாடல் வரிகள் பிரமாதம்.