சொல் வரிசை - 166 புதிருக்காக, கீழே ஆறு (6) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. பாணா காத்தாடி (--- --- --- --- --- அதன் பேர் என்னவென கேட்டேன்)
2. நரசிம்மா (--- --- --- --- கண்ணால் கொன்றாயே கண்ணே நீ யாரோ)
3. வண்டிச் சக்கரம் (--- --- --- செல்வம் தேடாமல் தானாக சேரும்)
4. புதிய மன்னர்கள்(--- --- --- மடிப்புல நான் கலங்கி போனேன்டி)
5. பட்டாளம் (--- --- --- கண்டேனே எதிரில் நீ வந்தால்)
6. மோதி விளையாடு (--- --- --- --- போதாது போதாது போடா)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://97.99.106.111/t/
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://google.com
ராமராவ்
ReplyDelete1. பாணா காத்தாடி - என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது
2. நரசிம்மா - காதல் ஆராரோ காதல் ஆராரோ
3. வண்டிச் சக்கரம் - தேவி வந்த நேரம்
4. புதிய மன்னர்கள் - நீ காட்டும் சேல
5. பட்டாளம் - என்னில் நூறு மாற்றம்
6. மோதி விளையாடு - பாதி காதல் பாதி முத்தம்
இறுதி விடை :
என் காதல் தேவி
நீ என்னில் பாதி
- ராகங்கள் மாறுவதில்லை
by மாதவ்
திரு ஸ்ரீதரன் துரைவேலு 10.4.2017 அன்று அனுப்பிய விடைகள்:
ReplyDeleteஎன் நெஞ்சில் ஒரு பூ பூத்தது
காதல் ஆராரோ காதல் ஆராரோ
தேவி வந்த நேரம்
நீ கட்டும் சேலை
என்னில் நூறு மாற்றம்
பாதி காதல் பாதி முத்தம்
என் காதல் தேவி நீ என்னில் பாதி
திரைப்படம் : ராகங்கள் மாறுவதில்லை