சொல் வரிசை - 106 புதிருக்காக, கீழே ஆறு (6) திரைப் படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. புதுமைப்பித்தன் (--- --- --- --- --- எனதன்பே என்னைப் பார்)
2. புதிய வாழ்க்கை (--- --- --- ஆடத் தெரிந்தவர் ஆடுங்கள்)
3. பஞ்ச தந்திரம் (--- --- மீண்டும் நானே வந்தேன்)
4. சங்கே முழங்கு (--- --- --- --- --- உன்னைத் தழுவிக் கண்டேன்)
5. தாமிரபரணி (--- --- --- --- கொல்லப் பாக்குதே)
6. நங்கூரம் (--- --- நீ இல்லாமல் நான் இல்லையே)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://tamiltunes.com/
http://mymazaa.com/tamil/audiosongs/
ராமராவ்