Tuesday, October 6, 2015

சொல் வரிசை - 89


சொல் வரிசை - 89 புதிருக்காக, கீழே எட்டு  (8)  திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.  

1.     பந்தபாசம்  ( --- --- --- --- நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ)  
2.     முள்ளும் மலரும் (--- --- --- --- நெய் மணக்கும் கத்திரிக்கா)
3.     வசீகரா (--- --- --- உன்னை எனக்கு பிடிக்கும் என்று)  
4.     மேகா (--- --- --- --- --- என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்)
5.     தென்றலே என்னை தொடு (--- --- --- இளைய வண்டு தான் பார்த்தது)
6.     மயங்குகிறாள் ஒரு மாது (--- --- --- --- இளமையின் கனவு மலரும் வளரும்)  
7.     புதிய பூமி (--- --- --- --- இது ஊர் அறிந்த உண்மை)
8.     ஊட்டி வரை உறவு  (--- --- --- --- வாசலில் நின்றது வாழ வா என்றது )  
  
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  


ராமராவ்  

2 comments:

  1. 1. பந்தபாசம் - நித்தம் நித்தம் மாறுகின்ற தெத்தனையோ
    2. முள்ளும் மலரும் - நித்தம் நித்தம் நெல்லிச் சோறு
    3. வசீகரா - ஒரு தடவை சொல்வாயா
    4. மேகா - புத்தம் புது காலை பொன்னிற வேளை
    5. தென்றலே என்னை தொடு - புதிய பூவிது பூத்தது
    6. மயங்குகிறாள் ஒரு மாது- சுகம் ஆயிரம் என் நினைவிலே
    7. புதிய பூமி - நான் உங்கள் வீட்டுப் பிள்ளை
    8. ஊட்டி வரை உறவு - தேடினேன் வந்தது நாடினேன் தந்தது

    இறுதி விடை :
    நித்தம் நித்தம் ஒரு புத்தம் புதிய சுகம் நான் தேடினேன்
    - 100/100.

    ReplyDelete
  2. திரு சுரேஷ் பாபு 6.10.15 அன்று அனுப்பிய விடை:

    நித்தம் நித்தம் ஒரு
    புத்தம் புதிய சுகம் நான் தேடினேன்
    இளமை கொஞ்சும் விழி
    தலைமை தாங்கும் உனை என்றும் நாடினேன் – நூற்றுக்கு நூறு

    ReplyDelete