Monday, August 5, 2013

எழுத்து அந்தாதி - 7



எழுத்து அந்தாதி - 7 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

1.   தத்தித் தாவிக் குதிக்கும் பருவம்  (4,3)                              (2006)
2.   சொந்த நாட்டில் வாழ்பவர்  (3)                                            (விஜயகாந்த்)
3.  கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நாள்  (3,4)   (சிவாஜி கணேசன்)
4.  மத்தளம் கொட்டுவதில் மகாவித்வான்  (5,8)              (சிவாஜி கணேசன்)

5.  இனிப்பாய் உள்ளதே  (6)                                                      (ஜீவா)   
6.   ----  ----, நாடினேன் தந்தது வாசலில் நின்றது வாழவா என்றது (4,4) (1997)

வழக்கமான குறிப்புகளுடன், அடைப்புக்குறிகளுக்குள் திரைப்படம் வெளியான வருடமோ அல்லது திரைப்படத்தின் முக்கிய நடிகரின்  பெயரோ  இடம்  பெற்றிருக்கும்.  குறிப்புகளின் உதவிகொண்டு  விடைக்கான திரைப்படங்களின் பெயர்களை கண்டுபிடிக்க வேண்டும்.

1-வது படத்தின் கடைசி எழுத்தே 2-வது படத்தின் முதல் எழுத்து. 2-வது படத்தின் கடைசி எழுத்தே 3-வது படத்தின் முதல் எழுத்து. இப்படியே, 3-வது, 4-வது, 5-வது, 6-வது  படங்களின் முதல் எழுத்துக்கள் அமையும். 6-வது படத்தின் கடைசி எழுத்து 1-வது படத்தின் முதல் எழுத்தாக அமையும்.     

எழுத்து அந்தாதி புதிர் பற்றிய விளக்கம் அறிய Link: http://thiraijaalam.blogspot.in/2013/06/blog-post.html சென்று பார்க்கவும். 

விடைக்கான அனைத்து திரைப்படப் பெயர்களையும் பின்னூட்டமாகவோ (Comments)  அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

எழுத்து அந்தாதி - 6 க்கான விடைகள்: 
 
 
1.  அஞ்சுகம் எங்கேயாவது கிடைப்பாளா என கே.ஆர்.ராமசாமி தேடினார் (3,3) (1954)    - சுகம் எங்கே 
2.  குழந்தைகளை கடத்திய குற்றவாளிகள் விமல், சிவகார்த்திகேயன் (2,3,4,3) (2013)     - கேடி பில்லா கில்லாடி ரங்கா 
3.  வாரணாசியில் கண்ணிழந்த விக்ரம்  (2)  (2011)                                                                      -  காசி 

4.  இளையவரில் சிறியவர் பிரபு  (3,3)  (1992)                                                                                  -  சின்ன தம்பி 
5.  ஸ்ரீதேவியைப்பிரியாத ரஜினி (3) (1978)                                                                                         - பிரியா  
6.   ஜெய்சங்கர் ஜெயலலிதாவிடம் கேட்கும் வாலில்லா நீர்யானை கலங்கியது  (2,1) (1966)  - யார் நீ 
7.  நியாயத்திற்கு சிரம் தாழ்த்து, ராமச்சந்திரா  (4,2,4) (1976)                                                     - நீதிக்கு தலை வணங்கு 
8.  பேபி கீர்த்திகா, ராம நாராயணனின் சின்னப் பேய்  (4,3)  (2010)                                         - குட்டிப் பிசாசு 
 
சரியான விடைகளை அனுப்பியவர்கள்:   முத்து, Madhav, 10அம்மா, மதுமதி, நாகராஜன், வைத்தியநாதன்.  கீதா ராமமூர்த்தி
 
இவர்கள் எல்லோருக்கும் பாராட்டுக்கள். நன்றி.  

 
ராமராவ் 

எழுத்து வரிசை - 32



எழுத்து வரிசை புதிர் - 32 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:

 

1   நெருப்பு, கவிதை, காற்று மூன்றும் சேர்ந்த பண்டிகை (4)      -  2007  
2   நாணயத்தை சுண்டிப் பார்த்தால் விழுவது  (2,3)                       -  1969, 2011  
3   ஊர் சுற்றித் திரிபவர்கள் (5)                                                               -  2009
4   முகிலுக்கும் நீர்வேட்கை இருக்கும்   (7,5)                                    -  1980
5   கமலின் பிம்பம் உண்மையாகிறது   (3,6)                                      -  1978
6   ரேவதி முதன் முதல் மேடையேறும் நேரம்     (6,2)                    -  1990  
7   தக்க தருணத்தில் சென்ற உயிரை மீட்கும் மூலிகை  (3,4)      -  1957 
 

இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் கடைசி எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும்.
 
அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
  
குறிப்பு:
எழுத்து வரிசைக்கான விடை  (3,4).  2013ல்  வெளிவந்த திரைப்படம்.      
.  :
அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னோட்டம் மூலமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.

எழுத்து வரிசை - 31 க்கான விடைகள்: 

 
1   ராதிகா கால்விரலில் அணிந்த வளையம் (3)                    -  1982          -  மெட்டி 
2   உணவளித்த கரம் எம்ஜியாருடையது.  (6,1)                       -  1972          -  அன்னமிட்ட கை  
3   ஒளியை நோக்கி வருமாறு அழைப்பது ராஜேஷ் (8,3)   -  1981      -   வெளிச்சத்துக்கு வாங்க 
4   அக்காளிடம் தெய்வத்தைக் காணும் ரஜினி  (2)                -  1980          -   காளி 
5   பணக்கார மணாளன் விஜயகாந்த்  (3)                                 -  2002           -  ரமணா 
6   தேவிகா கள்ளம் கபடம் இல்லாதவள்?   (4,2)                     -  1971          -  வெகுளிப் பெண் 
7   சிவா(ஜி) கழுத்திலிருந்து பாம்பு கேட்டது  (3,5)                  -  1982           -  கருடா சௌக்கியமா  



எழுத்து வரிசை புதிர் விடை -         கண்ணாடி மாளிகை            

 
சரியான விடைகளை அனுப்பியவர்கள்முத்து, Madhav, மதுமதி. 10அம்மா, பார்த்திபன் கண்ணபிரான், கீதா ராமமூர்த்தி         
  
இவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். நன்றி.
 
ராமராவ்

Thursday, August 1, 2013

எழுத்துப் படிகள் - 34



எழுத்துப் படிகள் - 34 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள்:

அனைத்து திரைப்படங்களும்   சரோஜாதேவி  நடித்தவை.   இறுதி விடைக்கான  திரைப்படமும்  (7)   சரோஜாதேவி நடித்ததே.  
 
மேலும் வழக்கமான குறிப்புகளுடன்,   அந்த திரைப்படங்கள் வெளியான வருடங்களும் அடைப்புக் குறிகளுக்குள்   கொடுக்கப்பட்டிருக்கும்.   
 
1.    கண்டால் வயிறு நிறையும்  (5,2,3)        (1962)  
2.    மன்னனின் ஆணை   (3,4)                            (1967)           
3.     பாய்ந்து செல்லும் ஆறு   (3,2)                   (1969)
4.    கல்யாண மேடை   (7)                                   (1961)
5.    பங்கு பகிர்ந்தளித்தல்  (7)                           (1959)    
6.    மாங்கல்ய அதிர்ஷ்டம்  (2,5)
                     (1966)
7.     ஐநூறாயிரம்  (3,4)                                             (1969)
         
திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடித்தபின்,  இதே  வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3- வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  7-வது படத்தின் 7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்
    
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்
 
குறிப்பு:
 
இறுதி விடைக்கான திரைப்படத்தில் சிவாஜி கணேசன் ஜோடியாக நடித்திருந்தார். 

அனைத்து திரைப்படப் பெயர்களையும், (விடைக்கான திரைப்படத்தின் பெயர் உட்பட) பின்னூட்டமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

எழுத்துப் படிகள் 33 க்கான குறிப்புகளின் விடைகள்:
 
1.   ஜெயலலிதாவின் நேசத்தை நாடி  (4,2)                                                        -  அன்பைத் தேடி 
       (சித்திர மண்டபத்தில் சில முத்துகள் கொட்டி வைத்தேன் )   
2.   ரகுராமன், பலராமன், ஜெயராமன், ஸ்ரீராமன்.....  (3,4,4)                       -  ராமன் எத்தனை ராமனடி   
        (நல்லவர் வணங்கும் தேவனடி  )  
3.    பொதுவான பேரரசன்   (4,8)                                                                                  - ஜெனரல் சக்கரவர்த்தி 
       (முதலாவது ஆங்கிலச் சொல், படைத்தலைவரையும் குறிக்கும்)
4.   பள்ளி செல்லாத பெருநிலக்கிழார்   (5,5)                                                    -  படிக்காத பண்ணையார் 
       (K.S.கோபாலகிருஷ்ணன் எழுதி, தயாரித்து, இயக்கிய திரைப்படம் )
5.   தலையைக் கொய்த, நீண்ட ஆயுளைப் பெற்றவர் (5)                   - சிரஞ்சீவி 
      (இந்தப் பெயரில் ஒரு அரசியல்வாதி நடிகர் இருக்கிறார் ) 
6.   கொஞ்சம் மாற்றினாலும் பாண்டிய வீரன், மாறாத மாறன்  (2,5)   - வீர பாண்டியன் 
       (ஒரு அரசியல்வாதி நடிகரும் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார் )
7.    ஊரைக் காக்கும் கடவுள்  (3,4)                                                                           -  காவல் தெய்வம் 
        (மதுரை வீரன், அய்யனார், கருப்பண சாமி ... ) 
 
 
 
இறுதி விடை:    அமர காவியம்     
         
 
சரியான விடைகளை அனுப்பியவர்கள் :  Madhav,  10அம்மா, முத்து, வைத்தியநாதன், மதுமதி        
 
 
இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.
 
ராமராவ்