Thursday, February 27, 2014

எழுத்துப் படிகள் - 62


எழுத்துப் படிகள் - 62 க்கான அனைத்து திரைப்படங்களும்  சிவாஜி கணேசன்  நடித்தவை.    ஆனால்   இறுதி   விடைக்கான திரைப்படம்   (4,3)    எம். ஜி. ஆர்.  கதாநாயகனாக நடித்தது. 
 
எழுத்துப் படிகள் - 62 க்கான திரைப்படங்களின் பெயர்கள்
 
1.    குலமா குணமா                      
2.   ராஜ மரியாதை                       
3.   எமனுக்கு எமன்                     
4.   மனோகரா                      
5.   அவன் ஒரு சரித்திரம்              
         
6.   சாந்தி 
7.   அந்த நாள்       
           
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  6-வது படத்தின்  6-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

குறிப்பு:
 
விடைக்கான திரைப்படத்தின் திரைக்கதை, உரையாடலை எழுதியவர் கலைஞர் கருணாநிதி.
 
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்   

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
 
எழுத்துப் படிகள் - 61 க்கான திரைப்படங்களின் பெயர்கள்:
 
1.    இதயமலர்                    
2.   தசாவதாரம்                      
3.   சட்டம் என் கையில்                    
4.   சிங்கார வேலன்                     
5.   தேவர் மகன்             
         
6.   நாயகன்      
      
இறுதி விடை:          தங்க மகன்            
 
சரியான விடைகளை அனுப்பியவர்கள் :
 
1.  முத்து சுப்ரமண்யம்        
2.  சுஜி 
3.  மாதவ் மூர்த்தி
 
இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.

ராமராவ் 

Monday, February 24, 2014

சொல் அந்தாதி - 19


 
சொல் அந்தாதி  -  19     புதிருக்காக, கீழே   (ஐந்து ) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியும் கொடுக்கப்பட்டுள்ளன.

1.  பாக்கியலட்சுமி   -  காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே          
 
2.  மாயி                            
 
3.  ருசி கண்ட பூனை                  
 
4.  கண்ணுக்கொரு வண்ணக்கிளி                   

5.  படிக்காத பண்ணையார்                     
 
             
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில்/ இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 
   
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது  திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டுபிடித்து அனுப்ப வேண்டும்.
 
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
 
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
* * * * * * * *
சொல் அந்தாதி  18 புதிருக்கான விடைகள்:  
 
1.  பெண்ணே நீ வாழ்க   -  உயிர் நீ உனக்கொரு உடல் நான்         
 
2.  குடியிருந்த கோயில்  - நான் யார் நான் யார் நீ யார்                           
 
3.  இதயத்தில் நீ  - யார் சிரித்தால் என்ன                
 
4.  பல்லாண்டு வாழ்க  - என்ன சுகம் என்ன சுகம்                 

5.  நான் போட்ட சவால் - சுகம் சுகமே ஹேய் தொடத் தொடத் தானே          
 
சரியான விடைகளை அனுப்பியவர்கள்:
   
1.  முத்து சுப்ரமண்யம்
2.  மாதவ் மூர்த்தி
 
இவர்கள்  இருவருக்கும்  பாராட்டுக்கள்.  நன்றி.      
 
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.