Sunday, August 24, 2014

எழுத்துப் படிகள் - 79


எழுத்துப் படிகள்79 க்கான அனைத்து திரைப்படங்களும்   சிவாஜி கணேசன் நடித்தவை.   ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்  (8)  ஜெயலலிதா கதாநாயகியாக நடித்தது. 
 
எழுத்துப் படிகள்79 க்கான திரைப்படங்களின் பெயர்கள் 
 
1.      சரித்திர நாயகன்                                       
2.     நெஞ்சங்கள்                                       
3.     மருத நாட்டு வீரன்                                     
4.     சிம்மசொப்பனம்                                       
5.     தில்லானா மோகனாம்பாள்                              
         
6.     தேவர் மகன்
7.     குலமா குணமா 
8.     முதல் குரல்          
 
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  8-வது படத்தின்  8-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்
 
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்
 
குறிப்பு:  மணமான மங்கைக்கு அடையாளம் 
   
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும் 

ராமராவ் 

Sunday, August 3, 2014

சொல் வரிசை - 68

 
சொல் வரிசை - 68  புதிருக்காக, கீழே   8 (எட்டு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.   மீண்டும் ஒரு காதல் கதை (--- --- --- --- எங்கெங்கிலும் ஆலாபனை)
2.   எஜமான் (--- --- --- என்னை பார்த்து ஒளி வீசு) 
3.   சொன்னது நீதானா (--- --- --- அழகாடும் பூஞ்சோலையே)
4.   காதல் வானிலே (--- --- --- சிறகாய் நீ வா)
5.   பராசக்தி (--- --- --- --- --- உந்தன் எண்ணத்தை சொல்லி விட்டு போங்க)
6.   நெஞ்சில் ஒரு முள்  (--- --- --- இனி நாளும் பாடலாம்)
7.   நான் ஏன் பிறந்தேன் (--- --- --- நலமாக வேண்டும்)
8.   நான் பாடும் பாடல் (--- --- --- என் வாழ்விலே ஒரே பொன் வேளை)
 
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து,  அவற்றில் முதல் சொற்களை மட்டும்  வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
 
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
 
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.