Saturday, September 29, 2012

எழுத்துப் படிகள் - 3

எழுத்துப் படிகள் - 3 க்கான திரைப்படங்களின் பெயர்கள் 
உனக்காக நான்
மன்னவன் வந்தானடி 
முத்துக்கள் மூன்று  
வீரபாண்டிய கட்டபொம்மன்
பந்த பாசம்   
காவல் தெய்வம்   
ரோஜாவின் ராஜா

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால்  அந்த வரிசையில்முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது படத்தின் 7-வது எழுத்து,  இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும் 
விடைக்கான திரைப்படத்தின் பெயர்  உட்பட அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவையாக அமைந்துள்ளதை காணலாம்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.
எழுத்துப் படிகள் - 2 க்கான விடை:   உரிமைக்குரல்.  

சரியான விடையை அனுப்பியவர்கள்: யோசிப்பவர், Madhav ,  
சாந்தி நாராயணன்,  நாகராஜ்,  சுதாகர், லாவண்யா. 

இவர்கள் அனைவர்க்கும் நன்றி. வாழ்த்துகள்.     
ராமராவ்

Friday, September 28, 2012

சொல் வரிசை - 4

கீழே ஏழு  திரைப்படங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

1 .     அனுபவி ராஜா அனுபவி    
2 .     பயணங்கள் முடிவதில்லை          
3 .     நிச்சய தாம்பூலம்    
4 .     நல்லவனுக்கு நல்லவன்     
5 .     வல்லவன் ஒருவன்   
6 .     தேடி வந்த மாப்பிள்ளை   
7 .     தூறல் நின்னு போச்சு  
 
ஒவ்வொரு திரைப்படத்திலிருந்து ஒரு பாடலை தேர்ந்தெடுத்து அந்தப் பாடல்களின் முதல் சொற்களை வரிசைப்படுத்தினால் மற்றொரு  பாடலின் முதல் இரண்டு வரிகளாக அமையும்.
அந்தப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்
கண்டு பிடிக்க வேண்டும்.   

குறிப்பு  (CLUE):

1 .  1-வது சொல் ஒரு ரத்தினம்.
2 .  3-வது சொல் நேரத்தையும் குறிக்கும். 
3 .  5-வது சொல்லும் 6-வது சொல்லும் ஒன்றே.      
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள்:      திரைப்படத்தின் பெயர், தொடக்கச்சொல், சொல்வரிசை பாடல் வரிகள்,
அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் 
பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம். 

                                                 * * * * * * * *
சொல் வரிசை - 3 க்கான விடைகள்: 
திரைப்படம்                                       பாடலின் தொடக்கம்                                          தொடக்கச் சொல்

மூன்று முடிச்சு                                      ஆடி வெள்ளி தேடி உன்னை                          ஆடி
வீராப்பு                                                      போனா வருவீரோ                                            போனா    
தொட்டதெல்லாம் பொன்னாகும்     ஆவணி மலரே ஐப்பசி மழையே                  ஆவணி   
வாரணம் ஆயிரம்                                அவ என்னை என்னை தேடி வந்த             அவ  
கன்னி ராசி                                             ஆள அசத்தும் மல்லியே மல்லியே           ஆள   
குலேபகாவலி                                        மயக்கும் மாலை பொழுதே நீ போ போ      மயக்கும் 
சண்டக்கோழி                                         தாவணி போட்ட தீபாவளி வந்தது ஏன்    தாவணி 


மேலே உள்ள ஏழு  தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல்
இரண்டு வரிகள்

ஆடி போனா ஆவணி - அவ   
ஆள மயக்கும் தாவணி   

இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் அட்டகத்தி.  

எல்லா விடைகளையும் இருவர் மட்டுமே அனுப்பி இருந்தார்கள்.   Madhav, லாவண்யா.  இருவருக்கும் நன்றி. வாழ்த்துகள். 

வேறு யாரும் முயற்சித்ததாகத் தெரியவில்லை.
குறிப்பில் குறிப்பிட்டிருந்தது போல் ஆடி, ஆவணி இரு தமிழ் மாதங்களின் பெயர்கள். 
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
 
ராமராவ்

Sunday, September 23, 2012

எழுத்துப் படிகள் - 2

எழுத்துப் படிகள் - 2 க்கான திரைப்படங்களின் பெயர்கள் 
இதயக்கனி
அடிமைப்பெண்
மாட்டுக்கார வேலன்  
தாயின் மடியில்
உழைக்கும் கரங்கள் 
மந்திரி குமாரி  
பரிசு

இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால்  அந்த வரிசையில்முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது படத்தின் 7-வது எழுத்து,  இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும் 
விடைக்கான திரைப்படத்தின் பெயர்  உட்பட அனைத்து திரைப்படங்களும் எம்.ஜி.ஆர். நடித்தவையாக அமைந்துள்ளதை காணலாம்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.
எழுத்துப் படிகள் - 1 க்கான விடை: முதல் மரியாதை.  

சரியான விடையை அனுப்பியவர்கள்: Rajesh Durairaj , மனு, யோசிப்பவர், 
சாந்தி நாராயணன், MeenuJai , சுதாகர், லாவண்யா. 

இவர்கள் அனைவர்க்கும் நன்றி. வாழ்த்துகள்.     
ராமராவ்

Friday, September 21, 2012

சொல் வரிசை - 3

கீழே ஏழு  திரைப்படங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

1 .     மூன்று முடிச்சு   
2 .     வீராப்பு         
3 .     தொட்டதெல்லாம் பொன்னாகும்   
4 .     வாரணம் ஆயிரம்   
5 .     கன்னி ராசி  
6 .     குலேபகாவலி  
7 .     சண்டக்கோழி 
 
ஒவ்வொரு திரைப்படத்திலிருந்து ஒரு பாடலை தேர்ந்தெடுத்து அந்தப் பாடல்களின் முதல் சொற்களை வரிசைப்படுத்தினால் மற்றொரு  பாடலின் முதல் இரண்டு வரிகளாக அமையும்.
அந்தப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்
கண்டு பிடிக்க வேண்டும்.   

குறிப்பு  (CLUE):

சொல் வரிசை பாடல்: இரு தமிழ் மாதங்களின் பெயர்களைக் கொண்ட
புதுப்படப் பாடல்.     
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள்:      திரைப்படத்தின் பெயர், தொடக்கச்சொல், சொல்வரிசை பாடல் வரிகள்,
அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் 
பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம். 

                                                 * * * * * * * *
சொல் வரிசை - 2 க்கான விடைகள்: 
திரைப்படம்                                       பாடலின் தொடக்கம்                                          தொடக்கச் சொல்

மறுபடியும்                                        ஆசை அதிகம் வச்சி                                         ஆசை 
கண்ணெதிரே தோன்றினாள்        கனவே கலையாதே                                          கனவே   
அபூர்வ ராகங்கள்                             அதிசய ராகம் ஆனந்த ராகம்                          அதிசய  
எஜமான்                                              நிலவே முகம் காட்டு                                       நிலவே  
பாத காணிக்கை                               காதல் என்பது எதுவரை                                   காதல்  
குலமகள் ராதை                               உலகம் இதிலே அடங்குது                               உலகம்
பாக்ய லட்சுமி                                    காண வந்த காட்சி என்ன                                  காண 
மெல்ல திறந்தது கதவு                    வா வெண்ணிலா உன்னை தானே                 வா   


மேலே உள்ள எட்டு தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல்
இரண்டு வரிகள்

ஆசை கனவே அதிசய நிலவே  
காதல் உலகம் காண வா  

இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் இம்சை அரசன் 23 ம் புலிகேசி  

எல்லா விடைகளையும் இருவர் மட்டுமே அனுப்பி இருந்தார்கள்.   Madhav, MeenuJai . இருவருக்கும் நன்றி. வாழ்த்துகள். 

வேறு யாரும் முயற்சித்ததாகத் தெரியவில்லை.
குறிப்பில் குறிப்பிட்டிருந்தது போல் ஆசை, காதல் என்ற பெயர்களில்  இரு திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.
ஆசை-1 : ஜெமினி கணேசன், பத்மினி நடித்து 1956 ல் வெளிவந்தது.
ஆசை-2 : அஜித், சுவலட்சுமி நடித்து 1995 ல் வெளிவந்தது.
காதல்-1 :  நாகேஸ்வரராவ், பானுமதி நடித்து 1952 ல் வெளிவந்தது.
காதல்-2 :  பரத், சந்தியா நடித்து 2004 ல் வெளிவந்தது.  
   
ராமராவ்