Thursday, May 15, 2014

சொல் வரிசை - 66


சொல் வரிசை - 66 புதிருக்காக, கீழே   7 (ஏழு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.   உலகம் சுற்றும் வாலிபன் (--- --- --- உலவுகின்ற அழகோ)
2.   மஞ்சள் குங்குமம் (--- --- --- --- பெண் அணைத்தால் ராகமாலிகை) 
3.   அவசரக்காரி (--- --- --- ரசம் போனதெப்போது)
4.   கவிதா (--- --- --- பார்வையாலே அழைக்குதடி)
5.   வீரத்திருமகன் (--- --- --- நிலவென்னும் பொட்டு வைத்து)
6.   தண்ணீர் தண்ணீர் (--- --- --- --- இன்னும் கருக்குதடி ஈசான மூலையிலே)
7.   அநாதை ஆனந்தன் (--- --- --- --- வண்டாக ஆடட்டுமா) 
 
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து,  அவற்றில் முதல் சொற்களை மட்டும்  வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.

அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
சொல் வரிசை - 65 க்கான விடைகள்:

திரைப்படம்                                பாடலின் தொடக்கம்
1.   நாணயம் (நான் போகிறேன் மேலே மேலே பூலோகமே காலின் கீழே)
2.   அடுத்த வாரிசு (பேச கூடாது வெறும் பேச்சில் சுகம் ஏதும் இல்லை வேகம் இல்லை) 
3.   பஞ்ச தந்திரம் (வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன் வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி)
4.   காதல் சுகமானது (சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன் காதல் சுகமானது)
5.   தங்கத்தின் தங்கம் (ஓர் கிளையில் இரு வானம்பாடி இணைஞ்சு ஊர் முழுதும் கானம்பாடி திரிஞ்சு)
6.   சந்திப்பு (வார்த்தை நானடி கண்ணம்மா வர்ணமெட்டு நீதான் என் செல்லம்மா)
7.   செங்கோட்டை சிங்கம் (இல்லை என்னும் சொல்லே இனி என்றும் இங்கே இல்லே)
மேலே உள்ள தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்
நான் பேச வந்தேன் சொல்லத்தான் 
ஓர் வார்த்தை இல்லை    
 
இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்:    பாலூட்டி வளர்த்த கிளி 
சரியான  விடைகளை அனுப்பியவர்கள் : 
 
1.    மாதவ் மூர்த்தி 
2.    முத்து சுப்ரமண்யம்   
 
இவர்கள் இருவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  


ராமராவ்

No comments:

Post a Comment