Thursday, September 12, 2013

சொல் அந்தாதி - 1



சொல் அந்தாதி - 1 புதிருக்காக, கீழே  5 (ஐந்து ) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியும்   கொடுக்கப்பட்டுள்ளன.
 

1.    ரோஜா                             -  சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை               
2.    ஆனந்தம்           
3.    இதய வீணை 
4.    வெண்ணிற ஆடை 
5.    சிங்கம் - II 

 
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில்/ இசைத் தகட்டில்   எந்தச்  சொல்லோடு  முடிகிறதோ, அதே  சொல்லோடு  2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில்  இடம்  பெறும்  பாடல்  தொடங்கும். 2-வது  திரைப்படப்  பாடலின்  முடிவுச் சொல்லோடு 3-வது  திரைப்படப் பாடல் தொடங்கும்.  இதே போன்று, 4-வது, 5-வது  திரைப் படங்களில்  இடம் பெறும்  பாடல்களும்  அமையும்.     
 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது   திரைப்படப் பாடல்   களின் முதல் வரிகளைக் கண்டுபிடித்து அனுப்ப வேண்டும்.  
 
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க  வரிகளை  எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும்  கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

3 comments:

  1. Madhav,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  2. 10அம்மா,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete


  3. மதுமதி,

    எல்லா விடைகளும் சரி. பாராட்டுக்கள். நன்றி.



    ReplyDelete