சொல் வரிசை - 108 புதிருக்காக, கீழே ஏழு (7) திரைப் படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. வான்மதி (--- --- --- கைவளையல் ஓசையிலும் தேன்மொழி)
2. ரிக் ஷா மாமா (--- --- --- பொன்மாலை நேரம் காத்தாடுது)
3. கருப்பு ரோஜா (--- --- --- --- உயிரை பெறும் வரம் கேட்டு)
4. நான் (--- --- --- --- --- நீ மறந்தால் நான் வரவா)
5. மல்லிகா (--- --- --- மாளிகையின் வாசலுக்கே)
6. அங்காடி தெரு (--- --- --- --- உள் நெஞ்சில் கொண்டாட்டம்)
7. களத்தூர் கண்ணம்மா (--- --- --- --- அன்பு தந்தாளே)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://tamiltunes.com/
http://mymazaa.com/tamil/audiosongs/
ராமராவ்