Saturday, March 13, 2021

எழுத்துப் படிகள் - 333

 

 

எழுத்துப் படிகள் - 333  க்காக  கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  ஜெய்சங்கர் நடித்தவை.  ஆனால்  இறுதி விடைக்கான திரைப்படம்    (7) எம்.ஜி.ஆர்.  கதாநாயகனாக நடித்தது.  

 


எழுத்துப் படிகள் - 333 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.   கண் சிவந்தால் மண் சிவக்கும்                     

2.   ரௌடி ராக்கம்மா                 

3.   சிரித்த முகம்               

4.   தங்க கோபுரம்                           

5.   நேர்மை                      

6.   நெஞ்சுக்கு நீதி   

7.   உள்ளத்தில் குழந்தையடி   


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

No comments:

Post a Comment