Sunday, April 22, 2018

சொல் வரிசை - 182


சொல் வரிசை - 182   புதிருக்காக, கீழே ஏழு (7)  திரைப்படங்களின்  பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   குயிலே குயிலே (---  ---  --- கானம் பாடி காதலில் மகிழும்)
  
2.   செந்தமிழ் செல்வன் (---  ---  --- கிளி ரெண்டும் தடுமாறுது)
  

3.   மெல்ல திறந்தது கதவு (---  ---  ---  தவிக்க துடிக்க)

4.   தெய்வத்தாய் (---  ---  ---  ---  என் இதயம் சொன்ன விலை)  

5.   தனிப்பிறவி (---  ---  --- கொஞ்சம் நெருங்கி பார்க்கும் நேரம்) 

6.   வெண்ணிற ஆடை (---  ---  ---  சின்ன விழி பார்வையிலே) 

7.   சின்னப்பதாஸ் (---  ---  ---  நீயும் நானும் வேறா)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்  முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல் இடம் பெற்ற  திரைப்படத்தின்  பெயரையும்  கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

2 comments:


  1. 1. குயிலே குயிலே - வானம்பாடி ஜோடி சேர்ந்து

    2. செந்தமிழ் செல்வன் - கூடு எங்கே தேடி

    3. மெல்ல திறந்தது கதவு - தேடும் கண் பார்வை

    4. தெய்வத்தாய் - இந்தப் புன்னகை என்ன விலை

    5. தனிப்பிறவி - நேரம் நல்ல நேரம்

    6. வெண்ணிற ஆடை - என்ன என்ன வார்த்தைகளோ

    7. சின்னப்பதாஸ் - பாடும் பக்த மீரா

    இறுதி விடை :
    வானம்பாடி கூடு தேடும் இந்த நேரம் என்ன பாடும்
    - தலை­யணை மந்­தி­ரம்

    ReplyDelete
  2. வானம்படி கூடு தேடும் இந்த நேரம் என்ன பாடும்.. படம் தலையனை மந்திரம்


    மிக அருமை

    ReplyDelete