சொல் வரிசை - 177 புதிருக்காக, கீழே ஆறு (6) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. சித்தி (--- --- --- --- --- மனிதன் ஆனதடா)
2. அரசியல் (--- --- --- சகி வள்ளுவன் வாசகி)
3. சின்னப் பசங்க நாங்க (--- --- --- ஒன்ன மனம் துடிக்க விட்டாக)
4. பாடு நிலாவே(--- --- --- --- உன் கூட்டை விட்டு இந்த வேளையிலே)
5. மாட்டுக்கார வேலன்(--- --- --- ஒரு கண்ணை சாய்க்கிறா)
6. பெரிய இடத்து பெண்(--- --- --- இது நமக்குள் இருப்பது அவசியம்)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com
ராமராவ்
1. சித்தி - இங்கே தெய்வம் பாதி மிருகம் பாதி
ReplyDelete2. அரசியல் - வா சகி வா சகி
3. சின்னப் பசங்க நாங்க - இங்கே மானமுள்ள பொண்ணு ஒன்ன
4. பாடு நிலாவே - வா வெளியே இளம் பூங்குயிலே
5. மாட்டுக்கார வேலன் - ஒரு பக்கம் பார்க்கிறா
6. பெரிய இடத்து பெண் - ரகசியம் பரம ரகசியம்
இறுதி விடை:
இங்கே வா இங்கே வா
ஒரு ரகசியம்
திரைப்படம் : காதல் வாகனம்
by மாதவ்
திருமதி சுதா ரகுராமன் 9.2.2018 அன்று அனுப்பிய விடைகள்:
ReplyDelete1. சித்தி (இங்கே தெய்வம் பாதி மிருகம் பாதி மனிதன் ஆனதடா)
2. அரசியல் (வா சகி வா சகி வள்ளுவன் வாசகி)
3. சின்னப் பசங்க நாங்க (இங்கே மானமுள்ள பொன்னு ஒன்ன மனம் துடிக்க விட்டாக)
4. பாடு நிலாவே(வா வெளியே இளம் பூங்குயிலே --- உன் கூட்டை விட்டு இந்த வேளையிலே)
5. மாட்டுக்கார வேலன்(ஒரு பக்கம் பாக்கிறா ஒரு கண்ணை சாய்க்கிறா)
6. பெரிய இடத்து பெண்(ரகசியம் பரம ரகசியம் இது நமக்குள் இருப்பது அவசியம்)
இங்கே வா இங்கே வா ஒரு ரகசியம்.
படம் -காதல் வாகனம்