Thursday, February 22, 2018

சொல் வரிசை - 178



சொல் வரிசை - 178   புதிருக்காக, கீழே  எட்டு   (8)   திரைப்படங்களின்  பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   தெய்வத்தாய் (---  ---  ---  ---  என் இதயம் சொன்ன விலை)
  
2.   அஞ்சலி (---  ---  உலகை ரசிக்க நினைத்தது)

3.   இவன் அவனேதான்
(---  ---  ---  ---  இனிக்கும் மாலை சோலை ஓரம்) 

4.   ஊருக்கு உழைப்பவன்(---  ---  ---  ---  நெஞ்சில் இரண்டு பாடல்கள் கொண்டு வந்தான்)  

5.   இன்று நேற்று நாளை (---  ---  ---  --- கொண்டு போகும் காதலே) 

6.   முடிசூடா மன்னன்(---  ---  ---  --- மயங்கும் மலரும் பல இரவு) 

7.   அவன் ஒரு சரித்திரம் (---  ---  ---  ---  ஆசை மழை மேகமே) 

8.   இதயத்தில் நீ (---  ---  ---  பிரிவு என்றொரு பொருளிருக்கும்) 

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில்  முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்,  அந்தப்  பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின்  பெயரையும்  கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.



* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  



http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

2 comments:

  1. திருமதி சுதா ரகுராமன் 23.2.2018 அன்று அனுப்பிய விடைகள்:

    1. தெய்வத்தாய் ( இந்தப் புன்னகை என்ன விலை என் இதயம் சொன்ன விலை)

    2. அஞ்சலி ( இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது)

    3. இவன் அவனேதான்( இன்ப எல்லை காணும் நேரம் இனிக்கும் மாலை சோலை ஓரம்)

    4. ஊருக்கு உழைப்பவன்(இரவுப் பாடகன் ஒருவன் வந்தான் நெஞ்சில் இரண்டு பாடல்கள் கொண்டு வந்தான்)

    5. இன்று நேற்று நாளை (இன்று நேற்று நாளையா கொண்டு போகும் காதலே)

    6. முடிசூடா மன்னன் (தொடங்கும் தொடரும் புது உறவு மயங்கும் மலரும் பல இரவு)

    7. அவன் ஒரு சரித்திரம் (அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழை மேகமே)

    8. இதயத்தில் நீ (உறவு என்றொரு சொல்லிருந்தால் பிரிவு என்றொரு பொருளிருக்கும்)

    இந்த இரவு இன்ப இரவு இன்று தொடங்கும் அன்பு உறவு.

    "புதிய சகாப்தம்"

    ReplyDelete
  2. திரு மாதவ் மூர்த்தி 28.2.2018 அன்று அனுப்பிய விடைகள்:

    1. தெய்வத்தாய் - இந்தப் புன்னகை என்ன விலை
    2. அஞ்சலி - இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது)
    3. இவன் அவனேதான் - இன்ப எல்லை காணும் நேரம்
    4. ஊருக்கு உழைப்பவன் - இரவுப் பாடகன் ஒருவன் வந்தான்
    5. இன்று நேற்று நாளை - இன்று நேற்று நாளை யாவும்
    6. முடிசூடா மன்னன் - தொடங்கும் தொடரும் புது உறவு
    7. அவன் ஒரு சரித்திரம் - அன்பு நடமாடும் கலைக்கூடமே
    8. இதயத்தில் நீ - உறவு என்றொரு சொல்லிருந்தால்

    இறுதி விடை:

    இந்த இரவு இன்ப இரவு
    இன்று தொடங்கும் அன்பு உறவு

    "புதிய சகாப்தம்"

    ReplyDelete