Saturday, August 22, 2015

சொல் வரிசை - 85


சொல் வரிசை - 85 புதிருக்காக, கீழே ஏழு (7) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.  

1.     ஆரவல்லி  ( --- --- --- அன்னையிடம் நான் ஒரு நாளிலே )  
2.     வால்டர் வெற்றிவேல்  (--- --- --- என்னை கடிக்குது )
3.     நிலவு சுடுவதில்லை  (--- --- --- நானும் மலர் தானே )  
4.     எங்கேயோ கேட்ட குரல் (--- --- --- --- தாளத்தில் சேராத பாடல் உண்டா) 
5.     மொழி (--- --- --- எனை மன்னிப்பாயா)  
6.     குருதட்சணை (--- --- --- --- பயாஸ்கோப்பு படத்தை பாரு ) 
7.     கடன் வாங்கி கல்யாணம் (--- --- ---  புரியுதே உன் வேஷமே)      


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  


ராமராவ்  

2 comments:

  1. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 27.8.2015 அன்று அனுப்பிய விடைகள்:

    சின்னப் பெண்ணான போதிலே
    சின்ன ராசாவே சித்தெறும்பு என்ன கடிக்குது
    பூவே பனிப்பூவே நானும் மலர்தானே
    நீ பாடும் பாடல்
    கண்ணால் பேசும் பெண்ணே
    பாரு பாரு நல்லாப் பாரு
    போதும் உந்தன் ஜாலமே

    பாடல் : சின்ன சின்ன பூவே நீ கண்ணால் பாரு போதும்

    படம் : சங்கர் குரு

    ReplyDelete
  2. திரு மாதவ் மூர்த்தி 31.8.2015 அன்று அனுப்பிய விடை:

    Answer is chinna chinna poove nee kannal paru pothum from sankar guru.

    ReplyDelete