சொல் வரிசை - 84 புதிருக்காக, கீழே ஆறு (6) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. எங்க மாமா (--- --- --- --- பார்த்து பேசினால் ஏகபோகம்தான்)
2. நேற்று இன்று நாளை (--- --- --- --- உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை)
3. தீர்க்க சுமங்கலி (--- --- --- --- பொன்னான மலரல்லவோ)
4. பாசம் (--- --- --- --- வேல் வண்ணம் விழிகள் கண்டு)
5. நாயகன் (--- --- --- --- பலானது ஓடத்து மேலே)
6. மரகதம் (--- --- --- --- வெண்ணிலா உமிழும் நிறைமதியோ)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
ராமராவ்
ReplyDelete1. எங்க மாமா - பாவை பாவைதான் ஆசை ஆசைதான்
2. நேற்று இன்று நாளை - நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
3. தீர்க்க சுமங்கலி - மல்லிகை என் மன்னன் மயங்கும்
4. பாசம் - பால் வண்ணம் பருவம் கண்டு
5. நாயகன் - நிலா அது வானத்து மேலே
6. மரகதம் - புன்னகை தவழும் மதி முகமோ
இறுதி விடை :
பாவை நீ மல்லிகை
பால் நிலா புன்னகை
- தெய்வீக ராகங்கள்
திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 12.8.2015 அன்று அனுப்பியது:
ReplyDeleteமல்லிகை. மன்னன் மயங்கும். , நீ என்னென்ன சொன்னாலும் புதுமை, பால் வண்ணம் பருவம் கண்டு, நிலா அது வானத்து மேலே.
இது மட்டும் தான் கண்டு பிடிக்க முடிந்தது
திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 12.8.2015 அன்று அனுப்பியது:
ReplyDeleteஅன்புள்ள திரு ராமராவ்
தங்கள் வழிகாட்டலால் இன்னும்மொரு படி முன்னேறியுளேன் .
விடுபட்ட பாடல்கள்
பாவை பாவைதான்
புன்னகை தவழும்
இந்த 6 சொற்களையும் சேர்த்து
பாவை நீ பால் நிலா ,புன்னகை மல்லிகை என்பது சொந்தப் புனைவு
அப்படி ஒரு பாடல்,இருப்பதாகத் தெரிய வில்லை
திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 13.8.2015 அன்று அனுப்பியது:
ReplyDeleteகையைப் பிடித்து படிப் படியாய் அழைத்துச் சென்றமைக்கு நன்றி
பாவை நீ மல்லிகை
பால் நிலா புன்னகை.
தெய்வீக ராகங்களைக் கண்டேன்
ரஞ்சனி ராகம் போல் தோன்றுகிறது