Wednesday, July 1, 2015

சொல் வரிசை - 82


சொல் வரிசை - 82  புதிருக்காக, கீழே   7  (ஏழு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.     சிகப்பு ரோஜாக்கள் (--- --- --- --- மின்னல் வந்தது அடி கண்ணே)
2.     மஞ்சள் நிலா ( --- --- --- அதில் சேர்ந்தாடும் பாட்டே வா)
3.    நானும் மனிதன்தான் (--- --- --- --- நதி ஊற்று வரும் நேரம் ஒன்று) 
4.    கிழக்கு முகம் (--- --- --- அட நீதி செத்து போச்சு)
5.    உல்லாசம் ( --- --- --- --- பேசும் கண்ணுக்கு என்னை புரியாதா)

6.    பார் மகளே பார் (--- --- --- --- ஏக்கம் தந்தே சென்றன கைகள்)

7.    திருமதி ஒரு வெகுமதி (--- --- --- இங்கு பாடி நடிக்குது பெண்மை)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

ராமராவ்
  

1 comment:

  1. 1. சிகப்பு ரோஜாக்கள் - இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு
    2. மஞ்சள் நிலா - பூந்தென்றல் காற்றே வா
    3. நானும் மனிதன்தான்- காற்று வரும் காலம் ஒன்று
    4. கிழக்கு முகம் - இனி என்ன பேச்சு
    5. உல்லாசம்- வீசும் காற்றுக்குப் பூவைத் தெரியாதா
    6. பார் மகளே பார் - என்னைத் தொட்டு சென்றன கண்கள்
    7. திருமதி ஒரு வெகுமதி - பார்த்து சிரிக்குது பொம்மை

    இறுதி விடை:
    இந்த பூந்தென்றல் காற்று
    இனி வீசும் என்னைப் பார்த்து
    - மேட்டுக்குடி

    ReplyDelete