Wednesday, April 22, 2015

எழுத்துப் படிகள் - 100


எழுத்துப் படிகள் - 100 க்கான அனைத்து திரைப்படங்களும்  சிவாஜி கணேசன்   நடித்தவை.  இறுதி  விடைக்கான திரைப்படமும்  (6,4)  சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்ததே. 
 
எழுத்துப் படிகள் - 100 க்கான திரைப்படங்களின் பெயர்கள் 
 
1.     தங்கமலை ரகசியம்                                                       
2.     என்னைப்போல் ஒருவன்                                                            
3.     கந்தன் கருணை                                                          
4.     தேவர் மகன்                                                         
5.     மன்னவரு சின்னவரு     
6.     விளையாட்டுப்பிள்ளை  
7.     கலாட்டா கல்யாணம் 
8.     சிவகாமியின் செல்வன் 
9.     எல்லாம் உனக்காக
10.   வாணி ராணி                                                              
                                                            
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  10-வது படத்தின்  10-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 
 
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
 
குறிப்பு:

1. விடைக்கான திரைப்படத்தின் பெயரில் முதல் சொல்லில் ஒரு பெண்ணின் பெயர் இருக்கும்; இரண்டாவது சொல் ஒரு குடும்ப உறவைக் குறிக்கும்.

2.  திரைப்படத்தில் சிவாஜி கணேசனின் ஜோடியாக நடித்தவர்: சரோஜாதேவி. 

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும் 
 
ராமராவ் 

7 comments:

  1. இறுதி விடை: கல்யாணியின் கணவன்
    அனுப்புபவர்: முத்துசுப்ரமண்யம்

    ReplyDelete
  2. திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:

    <>

    மனமார்ந்த பாராட்டுகள்! சேவை தொடர வாழ்துக்கள்.

    <>

    தமிழ் மொழியின் சிறப்பு பெருமைப்பட வேண்டியதே.
    எனக்கு தேவநாகரி எழுத்துக்கள் தெரியும்; மற்ற இந்திய மொழி எழுத்துக்கள் பார்வயில் வேறாக இருந்தாலும், பொதுவாக அடிப்படையில் ஒன்றே. அவற்றில் கூட்டெழுத்துக்கள் உண்டு. மற்ற மொழிகளில் இம்மாதிரிப் புதிர்கள் அமைக்க முடியாமைக்கு அவற்றில் தமிழில் போல் பெருமளவு திரைப்படங்கள் (ஹிந்தி தவிர) வராமையும், பெயர்கள் வைக்கும் முறையும் காரணமாக இருக்குமோ?

    ReplyDelete
  3. திரு சந்தானம் குன்னத்தூர் 22.4.15 அன்று அனுப்பிய விடையும் கருத்தும்:

    " Cngratulations for your century. The answer is KALYAANIYIN KANAVAN.
    Hats off to your brilliance. "

    ReplyDelete
  4. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 23.4.15 அன்று அனுப்பிய விடையும் கருத்தும்:

    " நூறு புதிர்கள் வெற்றிகரமாகவும் சுவையுடனும் அளித்த உங்களுக்கு எனது பாராட்டுகள்
    நூறாவது புதிருக்கான விடை

    "கல்யாணியின் கணவன் "

    ReplyDelete
  5. திருமதி சாந்தி நாராயணன் 24.4.15 அன்று அனுப்பிய விடையும் கருத்தும்:

    கந்தன் கருணை
    எல்லாம் உனக்காக
    விளையாட்டுப்பிள்ளை
    வாணிராணி
    சிவகாமியின் செ லவன்
    தேவர் மகன்
    தங்கமலை ரகசியம்
    கலாட்டாகல்யாணம்
    மன்னவரு சின்னவரு
    என்னைப்போல் ஒருவன்

    இறுதி விடை:

    கல்யாணியின் கணவன்

    தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. திருமதி நாகமணி ஆனந்தம் 24.4.15 அன்று அனுப்பிய விடை:

    kalyaaniyin kanavan!

    ReplyDelete