சொல் வரிசை - 76 புதிருக்காக, கீழே 7 (ஏழு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. வாழ்விலே ஒருநாள் (--- --- இன்ப சுகம் தாராயோ)
2. போக்கிரி ( --- --- --- --- --- நீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்)
3. புதிய வாழ்க்கை (--- --- --- பேதை மனமே பேசு)
4. சென்னை 600028 (--- --- --- --- நான் தூசி ஆகின்றேன்)
5. மங்கள நாயகி ( --- --- --- அன்பெனும் ஓர் கவிதை )
6. நான் அவனில்லை (--- --- --- நான் ரசிகை உனக்கு பாவம்)
7. விடியும்வரை காத்திரு ( --- --- --- உன் அன்பை என்னென்பேன்)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து,
அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
ராமராவ்
1. வாழ்விலே ஒருநாள் (--- --- இன்ப சுகம் தாராயோ) - தென்றலே வாராயோ
ReplyDelete2. போக்கிரி ( --- --- --- --- --- நீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்) - நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்
3. புதிய வாழ்க்கை (--- --- --- பேதை மனமே பேசு) - பேசு மனமே பேசு
4. சென்னை 600028 (--- --- --- --- நான் தூசி ஆகின்றேன்) - உன் பார்வை மேலே பட்டால்
5. மங்கள நாயகி ( --- --- --- அன்பெனும் ஓர் கவிதை ) - கண்களால் நான் வரைந்தேன்
6. நான் அவனில்லை (--- --- --- நான் ரசிகை உனக்கு பாவம்) நீ கவிதை எனக்கு
7. விடியும்வரை காத்திரு ( --- --- --- உன் அன்பை என்னென்பேன்) - பேசு என் என்பே
இறுதி விடை :
தென்றலே நீ பேசு
உன் கண்களால் நீ பேசு
- கடவுள் அமைத்த மேடை