சொல் அந்தாதி - 27 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியும் கொடுக்கப்பட்டுள்ளன.
1. சந்திரோதயம் - கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம்
2. குடும்ப கௌரவம்
3. நீரும் நெருப்பும்
4. ராஜா தேசிங்கு
5. அமர்க்களம்
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில்/ இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டுபிடித்து அனுப்ப வேண்டும்.
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
* * * * * * * *
சொல் அந்தாதி - 26 புதிருக்கான குறிப்புகளும் விடைகளும் :
1. வளையாபதி - குளிர் தாமரை மலர் பொய்கை கண்டேன்
2. பூம்புகார் - வாழ்க்கை என்னும் ஓடம் வழங்குகின்ற பாடம்
3. கண்மணி ராஜா - ஓடம் கடலோடும் அது சொல்லும் பொருளென்ன
2. பூம்புகார் - வாழ்க்கை என்னும் ஓடம் வழங்குகின்ற பாடம்
3. கண்மணி ராஜா - ஓடம் கடலோடும் அது சொல்லும் பொருளென்ன
4. வெடி - என்ன ஆச்சு எனக்கென்ன ஆச்சு
5. ஔவை சண்முகி - காதலா காதலா காதலில் தவிக்கிறேன்
சரியான விடைகளை அனுப்பியவர்கள்:
1. முத்து சுப்ரமண்யம்
2. மாதவ் மூர்த்தி
இவர்கள் இருவருக்கும் பாராட்டுக்கள். நன்றி.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
1. சந்திரோதயம் - கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம்
ReplyDelete2. குடும்ப கௌரவம் - கல்யாணம் ஆகாத கன்னி
3. நீரும் நெருப்பும் - கன்னி ஒருத்தி மடியில் காளை ஒருவன்
4. ராஜா தேசிங்கு - வந்தான் பாரு சலங்கை சத்தம்
5. அமர்க்களம் - சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
- மாதவ் மூர்த்தி