சொல் அந்தாதி - 20 புதிருக்காக, கீழே 5 (ஐந்து ) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியும் கொடுக்கப்பட்டுள்ளன.
1. தாலி பாக்கியம் - கண் பட்டது கொஞ்சம் புண் பட்டது நெஞ்சம்
2. அரச கட்டளை
3. ஏன்
4. அமர காவியம்
5. வாத்தியார் வீட்டுப் பிள்ளை
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில்/ இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டுபிடித்து அனுப்ப வேண்டும்.
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
* * * * * * * *
சொல் அந்தாதி - 19 புதிருக்கான குறிப்புகள் :
1. பாக்கியலட்சுமி - காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே
2. மாயி
3. ருசி கண்ட பூனை
4. கண்ணுக்கொரு வண்ணக்கிளி
5. படிக்காத பண்ணையார்
சரியான விடைகளை இதுவரை யாரும் அனுப்பவில்லை :
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
1. தாலி பாக்கியம் - கண் பட்டது கொஞ்சம் புண் பட்டது நெஞ்சம்
ReplyDelete2. அரச கட்டளை - என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
3. ஏன் - இறைவன் என்றொரு கவிஞன்
4. அமர காவியம் - மனிதன் ஒருவன்தான் சிரிக்கத் தெரிந்தவன்
5. வாத்தியார் வீட்டுப் பிள்ளை - வாழ்கையிலே கஷ்டம் வந்து நொந்தவனுக்கெல்லாம்
1. தாலி பாக்கியம் - கண் பட்டது கொஞ்சம் புண் பட்டது நெஞ்சம்
ReplyDelete2. அரச கட்டளை - என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
3. ஏன் - இறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை மனிதன்
4. அமர காவியம் - மனிதன் ஒருவன்தான் சிரிக்கத் தெரிந்தவன்
5. வாத்தியார் வீட்டுப் பிள்ளை - வாழ்க்கையில் துன்பம் பெருகும் போது