Tuesday, February 5, 2013

எழுத்துப் படிகள் - 17


எழுத்துப் படிகள் - 17 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள்:

அனைத்து திரைப்படங்களும் விஜயகாந்த் நடித்தவை
 
1 . மனதிலே தைரியமிருக்குமேயானால் (4,7)
2 . சம்பளத்திற்கு வேலை செய்பவன் (6)
3 . விண்ணைப் போன்ற (5,2)
4 . சுபதினம் (3,2)
5 . சொந்த நாட்டவன் (3)
6 . எங்களுடைய மூலதனம் கொண்ட வியாபாரி (3,4)


திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடித்தபின், அவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3- வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது படத்தின் 6-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
 
குறிப்பு:
 
இறுதி விடைக்கான திரைப்படம் (6) ; திரைப்படத்தின் பெயர்:
ஒரு ஆங்கிலேய துரையை சுட்டுக் கொன்ற தமிழ் இளைஞனின் பெயர்.
 
 
விஜயகாந்த் நடித்த படங்களின் பட்டியலை கீழ்க்கண்ட வலைப்பதிவில் காணலாம்.
 

விடைக்கான திரைப்படமும் விஜயகாந்த் நடித்ததாக அமைந்துள்ளதை காணலாம்.

அனைத்து திரைப்படப் பெயர்களையும், (விடைக்கான திரைப்படத்தின் பெயர் உட்பட) பின்னூட்டமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

எழுத்துப் படிகள் - 16 க்கான குறிப்புகளின் விடைகள்:

1 . முருகன் அருள் (4,3)                                                                                      - கந்தன் கருணை
2 . அமாவாசைக்குப்பின் பௌர்ணமிக்கு முன் நிலவின் நிலை (5) - வளர்பிறை
3 . காமராஜர்? சாவியின் புத்தகம்? (6,4)                                  - சிவகாமியின் செல்வன்
4 . மயிரிழந்தால் உயிர் விடும் விலங்கினம் (5)                                   - கவரிமான்
5 . மிகச்சிறந்த குமாரன் (4,5)                                                                                - உத்தம புத்திரன்
6 . எழுத்து வரிசை - 3 புதிரின் விடை (3,3)                                           - தேனும் பாலும்

இறுதி விடை: தேவர் மகன்

சரியான விடைகளை அனுப்பியவர்கள் :முத்து, Madhav, வைத்தியநாதன், பாலகணேஷ், நாகராஜன்


இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.

ராமராவ்

5 comments:

  1. முகிலன்,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  2. நாகராஜன்,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  3. முத்து,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.


    ReplyDelete
  4. வைத்தியநாதன்,

    உங்கள் விடைகள் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  5. Madhav,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete