Tuesday, February 12, 2013

எழுத்துப் படிகள் - 18



எழுத்துப் படிகள் - 18 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள்:

அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை
1 . என்றும் அழியாத காப்பியம் (7)
2 . கல்வி கற்காதவன் (7)
3 . மிகச்சிறந்த மகன் (4,5)
4 . வாழ்வு (4)
5 . வரலாற்றுத் தலைவன் (5,4)
6 . அறிவு வெளிச்சம் (2,2)
7 . மத்தளம் கொட்டுவதில் மகாமன்னன் (5,8)


திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடித்தபின், அவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3- வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது படத்தின் 7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
 
குறிப்பு:
 
 
இறுதி விடைக்கான திரைப்படம் (5,2) ; ஜெமினி கணேசனுடன் நடித்த திரைப்படம். NAMAK HARAAM  என்ற ஹிந்திப்படத்தின் தமிழாக்கம்.
சிவாஜி கணேசன் நடித்துள்ள படங்களின் பட்டியல் (தமிழில்) கீழே கண்ட வலைப்பிரிவில் காணலாம்.

விடைக்கான திரைப்படமும் சிவாஜி கணேசன் நடித்ததாக அமைந்துள்ளதை காணலாம்.

அனைத்து திரைப்படப் பெயர்களையும், (விடைக்கான திரைப்படத்தின் பெயர் உட்பட) பின்னூட்டமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

எழுத்துப் படிகள் - 17 க்கான குறிப்புகளின் விடைகள்:

1 . மனதிலே தைரியமிருக்குமேயானால் (4,7)           - நெஞ்சிலே துணிவிருந்தால்
2 . சம்பளத்திற்கு வேலை செய்பவன் (6)                             - கூலிக்காரன்
3 . விண்ணைப் போன்ற (5,2)                                                        - வானத்தைப் போல
4 . சுபதினம் (3,2)                                                                                   - நல்ல நாள்
5 . சொந்த நாட்டவன் (3)                                                                  - சுதேசி
6 . எங்களுடைய மூலதனம் கொண்ட வியாபாரி (3,4)  - எங்க முதலாளி

இறுதி விடை: வாஞ்சிநாதன்

சரியான விடைகளை அனுப்பியவர்கள் : முகிலன், முத்து, Madhav, வைத்தியநாதன், நாகராஜன்


இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.

ராமராவ்

 

5 comments:

  1. யோசிப்பவர் & 10அம்மா

    உங்கள் விடைகளனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  2. Suji,

    உங்கள் விடைகளனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  3. நாகராஜன்,

    உங்கள் விடைகளனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  4. 1 . என்றும் அழியாத காப்பியம் (7) -
    2 . கல்வி கற்காதவன் (7) - படிக்காதவன்
    3 . மிகச்சிறந்த மகன் (4,5) -
    4 . வாழ்வு (4) - வாழ்க்கை
    5 . வரலாற்றுத் தலைவன் (5,4)-
    6 . அறிவு வெளிச்சம் (2,2)
    7 . மத்தளம் கொட்டுவதில் மகாமன்னன் (5,8) -

    ReplyDelete
    Replies
    1. ILA,

      நீங்கள் கொடுத்த, குறிப்புகளுக்கான விடைகள் இரண்டும் சரி. மற்ற விடைகளை கண்டுபிடியுங்கள். குறுக்கெழுத்துப் புதிராகவும், சிவாஜி கணேசன் நடித்த படங்களின் லிஸ்டையும் பார்த்து கண்டு பிடியுங்கள்.

      Delete