கீழே ஏழு திரைப்படங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. இருவர் மட்டும்
2. டாக்டர் சிவா
3. புள்ள குட்டிக்காரன்
4. தூள்
5. சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்
6. அன்னை
7. சரஸ்வதி சபதம்
ஒவ்வொரு திரைப்படத்திலிருந்து ஒரு பாடலை தேர்ந்தெடுத்து அந்தப்
பாடல்களின் முதல் சொற்களை வரிசைப்படுத்தினால் மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு:
சொல் வரிசை விடைக்கான பாடலில்
3-வது, 7-வது சொற்கள் அரச குடும்பத்தை சேர்ந்தவர்களை குறிக்கும்.
1-வது சொல் ஒரு பூவைக் குறிக்கும்.
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, அனைத்து திரைப்படங்களின் பெயர்கள், பாடல்களின் தொடக்க வரிகள், தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
* * * * * * * *
சொல் வரிசை - 17 க்கான விடைகள்:
திரைப்படம் பாடலின் தொடக்கம் தொடக்கச் சொல்
1 . சூர சம்ஹாரம் ஆடும் நேரம் இது தான் வா வா ஆடும்
2 . கடவுள் அமைத்த மேடை மயிலே மயிலே உன் தோகை எங்கே மயிலே
3 . காயத்ரி ஆட்டம் கொண்டாட்டம் ஆட்டம்
4 . வருஷமெல்லாம் வசந்தம் எங்கே அந்த வெண்ணிலா எங்கே
5 . நான் பாடும் பாடல் பாடும் வானம்பாடி பாடும்
6 . கன்னி ராசி குயிலே குயிலே பூங்குயிலே குயிலே
7 . தேன் நிலவு பாட்டு பாடவா பார்த்து பேசவா பாட்டு
8 . சேது எங்கே செல்லும் இந்த பாதை எங்கே
மேலே உள்ள எட்டு தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்
ஆடும் மயிலே ஆட்டம் எங்கே
பாடும் குயிலே பாட்டு எங்கே
இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்: துளசி மாடம்
எல்லா விடைகளையும் அனுப்பியவர் : Madhav
இவருக்கு நன்றி. பாராட்டுக்கள்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
Madhav,
ReplyDeleteஉங்கள் அனைத்து விடைகளும் சரி. பாராட்டுக்கள். நன்றி.