எழுத்து வரிசை புதிர் - 15 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:
1 துரியோதனனின் மாமா கார்த்தி (3)
2 வடிவேலு ஒரு சாளுக்கிய மன்னன்? (3,4,3,4)
3 காமதேவன் சிம்பு (5)
4 பாண்டிராஜ் இயக்கிய பிள்ளைங்க? (4)
5 ஜவஹர்லால் நேருவின் புதல்வி அனு ஹாசன்? (4)
இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் கடைசி எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும்.
அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு:
எழுத்து வரிசைக்கான விடை: பிரபு நடித்த பன்னிரண்டில் ஒன்று. (5).
அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னோட்டம் மூலமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.
எழுத்து வரிசை - 14 க்கான விடைகள்:
1 யானைகளுக்கரசன் விஜயகாந்த்? (5) - கஜேந்திரா
2 ஜீவனின் துப்பாக்கி குண்டு (3) - தோட்டா
3 ராஜ்கிரண் குடும்பத்தில் ஐவரின் நிலம் (5,2) - பாண்டவர் பூமி
4 அஜீத் நிறம் சிவப்பு (2) - ரெட்
5 எம்.ஜி.ஆர். அளித்த வெகுமதி (3) - பரிசு
6 விக்ரமின் கடவுள் (2) - சாமி
எழுத்து வரிசை புதிர் விடை - மிட்டா மிராசு
சரியான விடைகளை அனுப்பியவர்கள்: Madhav, Suji, முத்து, நாகராஜன், வைத்தியநாதன், MeenuJai
இவர்கள் அனைவருக்கும். பாராட்டுக்கள். நன்றி.
ராமராவ்
Suji,
ReplyDeleteஉங்கள் விடைகள் எல்லாம் சரி. பாராட்டுக்கள். நன்றி.
வைத்தியநாதன்,
ReplyDeleteஉங்கள் விடைகள் எல்லாம் சரி. பாராட்டுக்கள். நன்றி.
பாலகணேஷ்,
ReplyDeleteஉங்களது விடைகளனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
முத்து,
ReplyDeleteஉங்கள் அனைத்து விடைகளும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
Madhav,
ReplyDeleteஉங்கள் அனைத்து விடைகளும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
நாகராஜன்,
ReplyDeleteஉங்கள் அனைத்து விடைகளும் சரி. பாராட்டுக்கள். நன்றி.