Saturday, December 8, 2012

எழுத்து வரிசை - 9


எழுத்து வரிசை புதிர் - 9 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:

 

1 கே.ஆர்.விஜயா வெட்கப்படும் புல்
2 தசரா மும்முரத்தில் ஜெமினி கணேசன்
3 விஜய் அம்பெய்ய பயன்படுத்தியது
4 சிவகுமார் ஒரு காவலாளி ஒரு நகைச்சுவை நடிகரும் கூட
5 கமலின் ரத்த வெள்ளம்
6 ராதாவின் தமக்கை புருஷன் சிவாஜி?






இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் கடைசி எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும். அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.

அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னோட்டம் மூலமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.

எழுத்து வரிசை - 8 க்கான விடைகள்:




1 விஜயகாந்த் மனம் விண்ணைப் போன்றது? - வானத்தைப்போல
2 சேனைத்தலைவன் ரஜினி - தளபதி
3 அஜீத்தின் ஜீவனோடு ஜீவனாக - உயிரோடு உயிராக
4 டி.ராஜேந்தரின் வாய்மொழியால் தான் பிரியமா? - சொன்னால் தான் காதலா
5 பாக்கியராஜின் மூன்று செல்லங்கள் - டார்லிங் டார்லிங் டார்லிங்
6 விஷாலின் வேட்டு - வெடி
7 சிவாஜியின் தெய்வலீலை - திருவிளையாடல்


எழுத்து வரிசை புதிர் விடை - தில்லாலங்கடி



சரியான விடைகளை அனுப்பியவர்கள்: Madhav, MeenuJai, 10அம்மா, யோசிப்பவர், நாடோடி இலக்கியன்


இவர்கள் அனைவருக்கும் நன்றி. வாழ்த்துகள்.


ராமராவ்


 

2 comments:

  1. MeenuJai,

    உங்கள் சரியான விடைகளுக்கு வாழ்த்துகள். நன்றி.

    ReplyDelete
  2. Madhav,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. வாழ்த்துகள். நன்றி.

    ReplyDelete