எழுத்து வரிசை புதிர் - 10 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:
1 இந்திய அழகன் ரஜினி?
2 நரேனின் உள்ளம் இருக்கும் மட்டும்
3 பிரியமான தந்தை சிவாஜி
4 கமல் ரஜினி வாலிபம் தள்ளாடுகிறது
5 ஓடம் செலுத்தும் எம்ஜி.ஆர்.
6 சிவாஜியின் செந்நிற பூமி?
இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் கடைசி எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும். அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னோட்டம் மூலமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.
எழுத்து வரிசை - 9 க்கான விடைகள்:
1 கே.ஆர்.விஜயா வெட்கப்படும் புல் - நாணல்
2 தசரா மும்முரத்தில் ஜெமினி கணேசன் - ராமு
3 விஜய் அம்பெய்ய பயன்படுத்தியது - வில்லு
4 சிவகுமார் ஒரு காவலாளி ஒரு நகைச்சுவை நடிகரும் கூட - வாட்ச்மேன் வடிவேலு
5 கமலின் ரத்த வெள்ளம் - குருதிப்புனல்
6 ராதாவின் தமக்கை புருஷன் சிவாஜி? - அம்பிகாபதி
எழுத்து வரிசை புதிர் விடை - தில்லுமுல்லு
சரியான விடைகளை அனுப்பியவர்கள்: Madhav, MeenuJai
இவர்கள் இருவருக்கும் நன்றி. வாழ்த்துகள்.
ராமராவ்
10அம்மா,
ReplyDeleteஉங்கள் சரியான விடைகளுக்கு வாழ்த்துகள். நன்றி.
MeenuJai,
ReplyDeleteஉங்கள் சரியான விடைகளுக்கு வாழ்த்துகள். நன்றி.
Madhav,
ReplyDeleteஉங்கள் இறுதி விடை சரி.