கீழே ஒன்பது திரைப்படங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
1 . காக்க காக்க
2 . சந்தோஷ் சுப்ரமண்யம்
3 . பாத காணிக்கை
4 . கிரீடம்
5 . நண்பன்
6 . தோட்டா
7 . பாலும் பழமும்
8 . பாக்யலட்சுமி
9 . வசந்தத்தில் ஓர் நாள்
ஒவ்வொரு திரைப்படத்திலிருந்து ஒரு பாடலை தேர்ந்தெடுத்து அந்தப் பாடல்களின்முதல் சொற்களை வரிசைப்படுத்தினால் மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்
கண்டு பிடிக்க வேண்டும்.
கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு:
சொல் வரிசை விடைக்கான பாடல் ஒரு புது திரைப்படப் பாடல்.
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, அனைத்து திரைப்படங்களின் பெயர்கள், பாடல்களின் தொடக்க வரிகள், தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
* * * * * * * *
சொல் வரிசை - 11 க்கான விடைகள்:
திரைப்படம் பாடலின் தொடக்கம் தொடக்கச் சொல்
1 . அம்மன் அருள் ஒன்றே ஒன்று நீ தர வேண்டும் ஒன்றே
2 . பணக்கார குடும்பம் ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று
3 . பாசம் உலகம் பிறந்தது எனக்காக உலகம்
4 . மக்களைப் பெற்ற மகராசி ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா ஒன்று
5 . குலமா குணமா உலகில் இரண்டு கிளிகள் உலகில்
6 . அவள் ஒரு தொடர்கதை தெய்வம் தந்த வீடு தெய்வம்
7 . ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஒன்று
மேலே உள்ள ஏழு தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்
ஒன்றே ஒன்று உலகம் ஒன்று
உலகில் தெய்வம் ஒன்று
இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்: குருதட்சணை
எல்லா விடைகளையும் அனுப்பியவர்கள் இருவர் மட்டுமே : Madhav , முகிலன்
இவர்கள் இருவருக்கும் நன்றி. வாழ்த்துகள்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
Madhav,
ReplyDeleteஉங்கள் சரியான விடைகளுக்கு நன்றி. வாழ்த்துகள்.
MeenuJai,
ReplyDeleteஉங்கள் சரியான விடைகளுக்கு நன்றி. வாழ்த்துகள்.