Wednesday, December 5, 2012

எழுத்துப் படிகள் - 11


எழுத்துப் படிகள் - 11 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள்:
அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை
1 . ஆர்யமாலாவின் கரம் பற்றியவன்
2 . முதலிரவுக்கு அருந்தவும் உண்ணவும் தருபவை
3 . தாய் வீடு
4 . நீண்ட ஆயுளைப் பெற்றவர்
5 . தலையாய கௌரவ சன்மானம்
6 . சுத்தத் தங்கம்
7 . இசையும் நாட்டியமும்



திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடித்தபின், அவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3- வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது படத்தின் 7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
 
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.


விடைக்கான திரைப்படமும் சிவாஜி கணேசன் நடித்ததாக அமைந்துள்ளதை காணலாம்.

அனைத்து திரைப்படப் பெயர்களையும், (விடைக்கான திரைப்படத்தின் பெயர் உட்பட) பின்னூட்டமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.
எழுத்துப் படிகள் - 10 க்கான குறிப்புகளின் விடைகள்:
1 நீதிபதி
2 ஏழை பங்காளன்
3 உறவுக்கு கை கொடுப்போம்
4 களத்தூர் கண்ணம்மா
5 பனித்திரை
6 குழந்தை உள்ளம்
7 மணாளனே மங்கையின் பாக்கியம்
இறுதி விடை: குறத்தி மகன்

சரியான விடைகளை அனுப்பியவர்கள் : Madhav, MeenuJai, 10அம்மா, முத்து, யோசிப்பவர்


இவர்கள் எல்லோருக்கும் நன்றி. வாழ்த்துகள்.
ராமராவ்
 

3 comments:

  1. முத்து,

    மிக சீக்கிரமாக சரியான விடைகளை கண்டுபிடித்து விட்டீர்கள்.

    வாழ்த்துகள். நன்றி.

    ReplyDelete
  2. Madhav,

    குறிப்புகளுக்கான விடைகள் எல்லாம் சரி. ஆனால், இறுதி விடை தவறு. Google உதவியுடன், சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்களின் பட்டியலை பார்த்தால் இறுதி விடை கண்டுபிடிக்கலாம். இந்த திரைப்படம் அவ்வளவு பிரபலமானதல்ல.

    ReplyDelete
    Replies
    1. Madhav,

      உங்கள் இறுதி விடை சரி. வாழ்த்துகள். நன்றி.

      Delete