எழுத்துப் படிகள் - 13 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள்:
அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை
1 . குருதிப்பொட்டு
2 . கலைமகளின் சூளுரை
3 . சாதி இனமா? பண்பா?
3 . சாதி இனமா? பண்பா?
4 . ஐஸ்வர்யம்
5 . வ.உ.சி
6 . சற்குணன்
6 . சற்குணன்
7 . ஆண்டவனின் அவதாரம்
8 . வெற்றிச்சின்னமான பொன் வில்லை
9 . பச்சை நிறக்கல்
திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடித்தபின், அவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3- வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 9-வது படத்தின் 9-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
விடைக்கான திரைப்படமும் சிவாஜி கணேசன் நடித்ததாக அமைந்துள்ளதை காணலாம்.
அனைத்து திரைப்படப் பெயர்களையும், (விடைக்கான திரைப்படத்தின் பெயர் உட்பட) பின்னூட்டமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.
எழுத்துப் படிகள் - 12 க்கான குறிப்புகளின் விடைகள்:
1 . எந்த இடத்திலிருந்தோ வந்த ஓசை - எங்கேயோ கேட்ட குரல்
2 . தமையனின் பர்வதம் - அண்ணாமலை
3 . நீதிப்போர் - தர்ம யுத்தம்
3 . நீதிப்போர் - தர்ம யுத்தம்
4 . சிப்பாய் - ராணுவ வீரன்
5 . மந்த்ராலய சுவாமி - ஸ்ரீராகவேந்திரர்
6 . சிவனின் நுதல்விழி - நெற்றிக்கண்
6 . சிவனின் நுதல்விழி - நெற்றிக்கண்
இறுதி விடை: தங்கமகன்
சரியான விடைகளை அனுப்பியவர்கள் : முத்து, 10அம்மா,
ராமச்சந்திரன் வைத்தியநாதன்
இவர்கள் மூவருக்கும் நன்றி. வாழ்த்துகள்.
ராமராவ்