Friday, July 26, 2013

எழுத்து அந்தாதி - 6



எழுத்து அந்தாதி - 6 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

1.  அஞ்சுகம் எங்கேயாவது கிடைப்பாளா என கே.ஆர்.ராமசாமி தேடினார் (3,3) (1954)
2.  குழந்தைகளை கடத்திய குற்றவாளிகள் விமல், சிவகார்த்திகேயன் (2,3,4,3) (2013)

3.  வாரணாசியில் கண்ணிழந்த விக்ரம்  (2)  (2011)
4.  இளையவரில் சிறியவர் பிரபு  (3,3)  (1992)
5.  ஸ்ரீதேவியைப்பிரியாத ரஜினி (3) (1978)   
6.   ஜெய்சங்கர் ஜெயலலிதாவிடம் கேட்கும் வாலில்லா நீர்யானை கலங்கியது  (2,1) (1966)
7.  நியாயத்திற்கு சிரம் தாழ்த்து, ராமச்சந்திரா  (4,2,4) (1976)
8.  பேபி கீர்த்திகா, ராம நாராயணனின் சின்னப் பேய்  (4,3)  (2010)

குறிப்புகளின் உதவிகொண்டு விடைக்கான திரைப்படங்களின் பெயர்களை கண்டுபிடிக்க வேண்டும்.

1-வது படத்தின் கடைசி எழுத்தே 2-வது படத்தின் முதல் எழுத்து. 2-வது படத்தின் கடைசி எழுத்தே 3-வது படத்தின் முதல் எழுத்து. இப்படியே, 3-வது, 4-வது, 5-வது, 6-வது,7-வது, 8-வது  படங்களின் முதல் எழுத்துக்கள் அமையும். 8-வது படத்தின் கடைசி எழுத்து 1-வது படத்தின் முதல் எழுத்தாக அமையும்.     

எழுத்து அந்தாதி புதிர் பற்றிய விளக்கம் அறிய Link: http://thiraijaalam.blogspot.in/2013/06/blog-post.html சென்று பார்க்கவும். 

விடைக்கான அனைத்து திரைப்படப் பெயர்களையும் பின்னூட்டமாகவோ (Comments)  அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

 
எழுத்து அந்தாதி - 5 க்கான விடைகள்: 
 

 1.    எழுத்தாளர் ரங்கராஜனின் மனைவி சரிதா?  (3)                                -  சுஜாதா 
2.    அன்னையின் பேச்சை மீறாதே! ராமச்சந்திரா  (2,3,4)                          - தாய் சொல்லை தட்டாதே 

3.   கிறித்துவ தேவாலயத்தில் விஜய்  (2)                                                   - தேவா 
4.   நிச்சயம் சொன்ன சொல்லை காப்பாற்றும் ஜெய்சங்கர் (5)         - வாக்குறுதி 
5.   விஜய் கையில் திருப்பாச்சேத்தி வீச்சரிவாள் (6)                               - திருப்பாச்சி 
6.    முரளியும் ரேவதியும் தாம் சிறு பிள்ளைகள் என்று சொல்வது   (3,4,3) - சின்ன பசங்க நாங்க
7.   சரோஜாதேவிக்கு ஜெமினி தரும் திருமண அன்பளிப்பு  (4,3)         - கல்யாண பரிசு 

 

சரியான விடைகளை அனுப்பியவர்கள்:   முத்து, Madhav, 10அம்மா, யோசிப்பவர், மதுமதி.
 
இவர்கள் எல்லோருக்கும் பாராட்டுக்கள். நன்றி.  

ராமராவ் 

Wednesday, July 24, 2013

எழுத்துப் படிகள் - 33



எழுத்துப் படிகள் - 33 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள்:

அனைத்து திரைப்படங்களும்   சிவாஜி   கணேசன் நடித்தவை.   இறுதி விடைக்கான  திரைப்படமும்  (3,4)   சிவாஜி  கணேசன் நடித்ததே.  
 
மேலும் வழக்கமான குறிப்புகளுடன்,   கொஞ்சம் அதிகப்படியான  குறிப்புகள்  அடைப்புக் குறிகளுக்குள்   கொடுக்கப்பட்டிருக்கும்.  அந்தக் குறிப்புகள், அந்த திரைப்படத்தில் இடம் பெறும்  பாடலாகவோ அல்லது  திரைப்படத்தின் பெயரைக் கண்டுபிடிக்க உதவுவதாகவோ இருக்கும். 
 
1.   ஜெயலலிதாவின் நேசத்தை நாடி  (4,2)
       (சித்திர மண்டபத்தில் சில முத்துகள் கொட்டி வைத்தேன் )   
2.   ரகுராமன், பலராமன், ஜெயராமன், ஸ்ரீராமன், சீதாராமன் .....  (3,4,4)    
        (நல்லவர் வணங்கும் தேவனடி  )  
3.    பொதுவான பேரரசன்   (4,8)
       (முதலாவது ஆங்கிலச் சொல், படைத்தலைவரையும் குறிக்கும்)
4.   பள்ளி செல்லாத பெருநிலக்கிழார்   (5,5)
       (K.S.கோபாலகிருஷ்ணன் எழுதி, தயாரித்து, இயக்கிய திரைப்படம் )
5.   தலையைக் கொய்த, நீண்ட ஆயுளைப் பெற்றவர் (5)
            (இந்தப் பெயரில் ஒரு அரசியல்வாதி நடிகர் இருக்கிறார் ) 
6.   கொஞ்சம் மாற்றினாலும் பாண்டிய வீரன்,  மாறாத மாறன்  (2,5)
       (ஒரு அரசியல்வாதி நடிகரும் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார் )
7.    ஊரைக் காக்கும் கடவுள்  (3,4)
        (மதுரை வீரன், அய்யனார், கருப்பண சாமி ... ) 


திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடித்தபின்,  இதே  வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3- வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  7-வது படத்தின் 7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்
    
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்
 
குறிப்பு:
இறுதி விடைக்கான திரைப்படத்தில் ஸ்ரீபிரியா, மாதவி நடித்திருந்தார்கள். 

சிவாஜி கணேசன்   நடித்துள்ள படங்களின் பட்டியல் கீழே கண்ட வலைப்பிரிவில் காணலாம்.
 
அனைத்து திரைப்படப் பெயர்களையும், (விடைக்கான திரைப்படத்தின் பெயர் உட்பட) பின்னூட்டமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

எழுத்துப் படிகள் 32 க்கான குறிப்புகளின் விடைகள்:
  
1.  சாவித்திரியும், விஜயகுமாரியும் காலடியில் இடும் தட்சணை (2,4) - பாத காணிக்கை 
       (பூஜைக்கு வந்த மலரே வா )   
2.  அந்தப் பெண்ணுக்கு (பாரதிக்கு) என்று ஒரு விருப்பம் (7,2,3) - அவளுக்கென்று ஓர் மனம்    
        (உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்  )  
3.  சாவித்திரியுடன் கல்யாணம்  (5)   - திருமணம் 
       (தங்க நிலவில் கண்களிரண்டு துள்ளித் திரிவதுண்டோ)
4.  முருகன் (சிவகுமார்) அருள்  (4,3)   - கந்தன் கருணை 
       (திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணிமலை மீது எதிரொலிக்கும் )
5. பல பெண்களை மயக்கி, மணந்து பின் அது தானல்ல என்பது (2,5) - நான் அவனில்லை 
            (மந்தார மலரே மந்தார மலரே நீராடி முடித்தாயோ) 
6.  அன்றுபோல் இன்றில்லை, நிறைய மாற்றங்களாகிவிட்டன  (3,3,3) - காலம் மாறிப் போச்சு 
       (ஏரு பூட்டி போவாயே அண்ணே சின்னண்ணே, உன் துன்பமெல்லாம் தீருமே அண்ணே சின்னண்ணே )
7.  நீதிபதியின் சிறந்த தீர்மானம்  (3,4)   - நல்ல தீர்ப்பு 
        (வண்டு வந்து பாடாமல் தென்றல் வந்து தீண்டாமல் ) 
 
 
 
இறுதி விடை:    பாவ மன்னிப்பு    
         
 
சரியான விடைகளை அனுப்பியவர்கள் :  Madhav,  10அம்மா, யோசிப்பவர், வைத்தியநாதன், மதுமதி        
 
 
இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.
 
ராமராவ்
 
 
 

Monday, July 22, 2013

சொல் வரிசை - 33



கீழே   8 (எட்டு )  திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும்  (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.     தென்றலே என்னைத் தொடு ( ------  வந்து என்னைத் தொடும் )
2.     திருப்பாச்சி                                  (  ------  எந்த ஊரு நான் எந்த ஊரு முகவரி தேவையில்லே )
3.     ஈரமான ரோஜாவே                  ( -------  காற்றே கொஞ்சம் நில்லு )
4.     குட்டி                                              (  -------  காதலிக்கும் பொண்ணு காதளிக்கலேன்னா கவலைப்படாதே )
5.     பவுனு பவுனுதான்                     ( --------  ஒண்ணு பாத்திருக்கேன் சேதி சொல்லி காத்திருக்கேன்) 
6    பெண்                                             ( -------- சொல்லை மறந்திடலாமோ வா வா வா )
7.      இறைவன் கொடுத்த வரம்     ( -------- என்றால் வானம் கூட மயங்கும் கீழே இறங்கும் )
8.     போக்கிரி                                      (  -------  முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ் )

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து,  அவற்றை  வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
 
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

குறிப்பு:
 
பாடல் காட்சியில் கதாநாயகியுடன் விக்ரம் ஜோடி சேர்ந்து நடித்தது.   
 
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
 
விடைகள் அனுப்பும் போது, அனைத்து திரைப்படங்களின் பெயர்கள், பாடல்களின் தொடக்க வரிகள், தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

* * * * * * * *
சொல் வரிசை - 32 க்கான விடைகள்:
திரைப்படம்                                     பாடலின் தொடக்கம்                                   

1.     கொடுத்து வைத்தவள்          மின்னல் வரும் சேதியிலே மழை பொழியும் )
2.     கஜினி                                   ( ஒரு  மாலை இள வெயில் நேரம் அழகான இலை உதிர் காலம்)
3.     ஆட வந்த தெய்வம்             ( கோடி கோடி இன்பம் தரவே தேடி வந்த செல்வம் )
4.     கலைஞன்                            (  எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா )
5.     பெண்ணே நீ வாழ்க            (  உயிர் நீ  உனக்கொரு உடல் நான் உடல் தொட்டால் இன்பக் கடல் நான் ) 
6    நிமிர்ந்து நில்                       ( தேடி வரும் தெய்வ சுகம் மன்னவனின் சந்நிதியில் )
7.     கிழக்கு வாசல்                     ( வந்ததே  ஓ ..  குங்குமம் தந்ததே  ஓ.. சம்மதம் )
 
 
மேலே உள்ள தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்

மின்னல் ஒரு கோடி 
எந்தன் உயிர் தேடி வந்ததே                

இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்:      வி.ஐ.பி.         
 
எல்லா விடைகளையும் அனுப்பியவர்கள்  : Madhav, முத்து, 10அம்மா, மதுமதி       

இவர்கள் எல்லோருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.


திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.