Saturday, March 9, 2013

எழுத்து வரிசை - 17

 

எழுத்து வரிசை புதிர் - 17 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:



1 கமலஹாசனின் கடிகார ஒலி (2,2,2)
2 சௌகார் ஜானகி ஒரு சிறு காப்பிய நாயகி (4,3)
3 ராமர் பாலம் கட்டிய விக்ரம்? (2)
4 நாசர் இயக்கிய பெண் தெய்வம் (3)
5 கார்த்திகாவின் ஜனனம் (4)
6 பார்த்திபன் வடிவேலுவிடம் கேள்வி கேட்பது எசகு பிசகாக (5,5)
 
 
இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் கடைசி எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும்.
 
அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.

குறிப்பு:
 
எழுத்து வரிசைக்கான விடை:
ரஜினிகாந்த், சரிதா நடித்த திரைப்படம் . (6). திரைப்படத்தின் பெயரில் 3-வது எழுத்து மெய்யெழுத்து. S.P. முத்துராமனின் இயக்கத்தில் உருவான திரைப்படம்.


அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னோட்டம் மூலமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.

எழுத்து வரிசை - 16 க்கான விடைகள்:


1 அருள்நிதியின் அமைதியான ஆசான் (2,2)                    - மௌன குரு
2 விஜய்யின் இளமை (2)                                                       - யூத்
3 பிரேம்ஜி அமரனின் நண்பா (2)                                          - தோழா
4 நரேன்! பிரசன்னாவைக்கண்டு பயப்படாதே (4)              - அஞ்சாதே
5 ரஜினி வணங்கும் துர்காதேவி (3)                                    - பைரவி
6 தமிழ் பாட்டி சுந்தராம்பாள் (4)                                          - ஔவையார்
7 படைத்தலைவன் சத்யராஜ் (5)                                         - சேனாதிபதி


எழுத்து வரிசை புதிர் விடை -                                  தேர்த்திருவிழா

சரியான விடைகளை அனுப்பியவர்கள்: Madhav, Suji, யோசிப்பவர், நாகராஜன், 10அம்மா

இவர்கள் அனைவருக்கும். பாராட்டுக்கள். நன்றி.
 
 
 

ராமராவ்

Wednesday, March 6, 2013

சொல் வரிசை - 20

 



கீழே ஆறு திரைப்படங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.     பலே பாண்டியா
2.    அடுத்த வாரிசு
3.    நெஞ்சில் ஓர் ஆலயம்
4.    வில்லு
5.    நாளைய பொழுதும் உன்னோடு
6.    வசந்தத்தில் ஓர் நாள்

ஒவ்வொரு திரைப்படத்திலிருந்து ஒரு பாடலை தேர்ந்தெடுத்து அந்தப்
பாடல்களின் முதல் சொற்களை வரிசைப்படுத்தினால் மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.

அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

குறிப்பு:


சொல் வரிசை விடைக்கான பாடல்:
 
 
திரையில் சிவாஜியும், சரோஜாதேவியும் இணைந்து பாடும் பாடல்.
2-வது சொல்லும், 5-வது சொல்லும் ஒன்றே.
முதற்சொல் தன்மையையும், 4-வது சொல் முன்னிலையையும் குறிக்கும்.



சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, அனைத்து திரைப்படங்களின் பெயர்கள், பாடல்களின் தொடக்க வரிகள், தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

* * * * * * * *
சொல் வரிசை - 19 க்கான விடைகள்:

திரைப்படம்                                                                       பாடலின் தொடக்கம்                                            தொடக்கச் சொல்


1 . அபியும் நானும்                                       ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு அய்யா                                   ஒரே
2 . கோயம்புத்தூர் மாப்பிள்ளை                  ஜீவன் என் ஜீவன் எனை நீங்கி                                            ஜீவன்
3 . குருதட்சணை                                         ஒன்றே ஒன்று உலகம் ஒன்று                                              ஒன்றே

4 . பார்த்தால் பசி தீரும்                               உள்ளம் என்பது ஆமை                                                         உள்ளம்

5 . மந்திரி குமாரி                                        வாராய் நீ வாராய்                                                                   வாராய்
6 . நானும் ஒரு பெண்                                கண்ணா கருமை நிற கண்ணா                                             கண்ணா




மேலே உள்ள  ஆறு  தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்

ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணா


இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்:      நீயா


எல்லா விடைகளையும் அனுப்பியவர் : ரமேஷ் வைத்யா, Madhav

இருவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.


திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.