Thursday, May 28, 2015

சொல் வரிசை - 80

 
சொல் வரிசை - 80  புதிருக்காக, கீழே   9 (ஒன்பது) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.     வெள்ளிக்கிழமை விரதம் (--- --- --- நேசம் என்னும் தறியினில்)
2.    கண்ணெதிரே தோன்றினாள் ( --- --- --- --- --- கையேந்தியே நான் கேட்பது)
3.    நிலாவே வா (--- --- --- --- என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்) 
4.     பொம்மலாட்டம் (--- --- --- --- வராங்காட்டி நா விடமாட்டேன் )
5.     அபியும் நானும் ( --- --- --- --- பொன் வாய் பேசும் என் தாரகையே)

6.    வைதேகி காத்திருந்தாள் (--- --- --- --- சிலம்பொலியும் புலம்புவது  கேள்)

7.    காதல் வானிலே (--- --- --- சிறகாய் நீ வா)
8.     நேற்று இன்று நாளை (--- --- --- --- உன்னை எங்கெங்கு தொட்டாலும்)
9.    காத்திருந்த கண்கள் (--- --- --- நீ போ என்றது நாணம்)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், ,மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

ராமராவ்
  

1 comment:

  1. Aasai kanave nee vaa vaa vaa azhagu silaiye nee vaa
    from ulagam palavitham

    ReplyDelete