Tuesday, May 21, 2013

சொல் வரிசை - 25

வணக்கம் நண்பர்களே,

திரை ஜாலம் - சொல் வரிசை புதிர்கள்  2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம்         தொடங்கப்பட்டு  எண்ணிக்கை 24ஐ எட்டிவிட்டது. சொல் வரிசை பாடல்கள் ஆறு முதல் ஒன்பது சொற்களைக் கொண்டு அமைந்ததாகவே இருந்தன.

சொல் வரிசை புதிர்களின் எண்ணிக்கை 25ஐ எட்டியிருப்பதையொட்டி சொல் வரிசை - 25ல் இடம் பெறும்  பாடலின் தொடக்க வரிகள் அதிகப்படியாக 13 சொற்களைக் கொண்டு அமைந்துள்ளன.  புதிரை எளிதாக்கும் வகையில் குறிப்புகளில் திரைப்படத்தின் பெயருடன், அந்த திரைப்படத்தில் இடம் பெறும் பாடலின் தொடக்க வரியும் (தொடக்கச் சொல்லை தவிர்த்து) கொடுக்கப்பட்டுள்ளது.

தொடக்கச் சொல்லை கண்டுபிடிக்க www.inbaminge.com website பயன்படுத்தினால் விடைகள் கிடைக்கும். websiteல் நுழைந்த பின் Movie Index சென்று திரைப்படத்தின் பெயர் எந்த ஆங்கில எழுத்தைக் கொண்டு தொடங்குகிறதோ அந்த எழுத்தை தேர்வு செய்தால் அந்த எழுத்தைக் கொண்டு தொடங்கும் எல்லா திரைப்படங்களின் தொகுப்பு கிடைக்கும். வேண்டிய திரைப்படத்தின் பெயரை தேர்வு செய்தால் அந்த திரைப்படத்தில் இடம் பெறும் பாடல்களைப் பற்றிய விவரங்கள் கிடைக்கும். தொடக்கச் சொல்லை கண்டுபிடித்து விடலாம். அந்த பாட்டையும் கேட்டு மகிழலாம். Download செய்யத் தேவையில்லை. 

சில சமயங்களில்  http://music.cooltoad.com/music/ website கூட பயன்படுத்த தேவைப்படலாம். ஆனால் இங்கு பாடலைக் கேட்க Download செய்ய வேண்டியிருக்கும்..

தொடக்கச் சொற்களை சேர்த்து கிடைக்கும் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க இதே website searchல் பாடலின் தொடக்கச் சொல்லை ஆங்கிலத்தில் Type செய்து தேடினால் திரைப்படத்தின் பெயர் கிடைக்கும். அல்லது சொல் வரிசை பாடலின் வரியை Google Searchல்  தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ Type செய்து தேடினாலும் திரைப்படத்தின் பெயர் கிடைக்கும்.

சொல் விசை - 25 க்கான புதிர் இதோ:

கீழே 13 (பதின்மூன்றுதிரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும்  (தொடக்கச் சொல்லை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.      உயர்ந்த உள்ளம்                ( -----------   என் ஜீவனே உன்னில் கண்டேனே என்னை தந்தேனே)
2.      மன்னாதி மன்னன்      ( ---------  நானோ யார் நிலாவே அவர் நினைவை கவர்ந்தது யார் நிலவே)
3.      மைதிலி என்னை காதலி ( -------- உந்தன் உறவை நாடி வந்த பறவை )
4.      ஊட்டி வரை உறவு                 (  -------  மாலை மயக்கம் யாருக்காக )
5.      அமர்க்களம்                              ( --------   வாழாத வாழ்வென்ன வாழ்வு ) 
6    ஜெயம் கொண்டான்               (  --------  கூடவா நீ மறந்து விட்டாய் )
7.     தைப்  பொங்கல்                          ( ---- சதிராடும் மாலை வெயில் வேளை) 
8.     குல விளக்கு                               ( ------ வந்தால் அதை கொண்டு வா வா)
9.     பஞ்ச தந்திரம்                             (  ------  ------ மீண்டும் நானே ------ )
10.   மயக்கம் என்ன                         ( ------ சொன்னதும் மழை வந்துச்சா)
11.   நீ தானே என் பொன் வசந்தம்       ( ---- வா வா என்று சொல்ல மாட்டேன்)
12.   சிங்கம்                 ( ---- இதயம் இதுவரை துடித்ததில்லை இப்போ துடிக்கிறதே) 
13.   ஜீன்ஸ்                   (------ காண்பதெல்லாம் தலைவா கண்களுக்கு சொந்தமில்லை) 

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றை வரிசைப்படுத்தினால்,  மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.


அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
 
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
 
விடைகள் அனுப்பும் போது, அனைத்து திரைப்படங்களின் பெயர்கள், பாடல்களின் தொடக்க வரிகள், தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

* * * * * * * *
சொல் வரிசை - 24 க்கான விடைகள்:
திரைப்படம்                                     பாடலின் தொடக்கம்                                                

1.     குழந்தைக்காக                (தை    மாத மேகம் இங்கு தரையில் ஆடுது)
2.      நீல மலர்கள்                     (  மாதம்    ஒரு பூ மலரும் அல்லிப்பூ) 
3.      குமுதம்             ( கல்யாணம்  ஆனவரே சௌக்கியமா உங்கள் கண்ணான பொன்மயிலும் சௌக்கியமா )  
4.      பெரிய இடத்துப் பெண்  ( அன்று  வந்ததும் இதே நிலா இன்று வந்ததும் அதே நிலா) 
5.      மனிதன் மாறவில்லை  ( காதல் யாத்திரைக்கு பிருந்தாவனமும் கற்பகச் சோலையும் ஏனோ)
6    அக்கரைப் பச்சை     (ஊர்கோலம்  போகின்ற கிளிக்கூட்டம் எல்லாம் ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று)

 

மேலே உள்ள தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்

தை மாதம் கல்யாணம்     
அன்று காதல் ஊர்கோலம்      

இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்:     தம்பிக்கு ஒரு பாட்டு    


எல்லா விடைகளையும் அனுப்பியவர்கள்  : Madhav, யோசிப்பவர், முத்து,  Suji, 10அம்மா, சாந்தி நாராயணன்     

இவர்கள் எல்லோருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.


திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.




 

4 comments:

  1. Madhav,

    உங்கள் இறுதி விடைகள் முற்றிலும் சரி. பாராட்டுக்கள். நன்றி

    ReplyDelete
  2. முத்து,

    உங்கள் இறுதி விடைகள் எல்லாமே சரி பாராட்டுக்கள் நன்றி.

    ReplyDelete
  3. யோசிப்பவர்,

    சரியான விடைகளை கண்டுபிடித்ததற்கு பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  4. 10அம்மா,

    உங்கள் இறுதி விடைகள் எல்லாமே சரி பாராட்டுக்கள் நன்றி.

    ReplyDelete