Tuesday, January 29, 2013

எழுத்துப் படிகள் - 16


எழுத்துப் படிகள் - 16 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள்:

அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை
1 . முருகன் அருள் (4,3)
2 . அமாவாசைக்குப்பின் பௌர்ணமிக்கு முன் நிலவின் நிலை (5)
3 . காமராஜர்? சாவியின் புத்தகம்? (6,4)
4 . மயிரிழந்தால் உயிர் விடும் விலங்கினம் (5)
5 . மிகச்சிறந்த குமாரன் (4,5)
6 . எழுத்து வரிசை - 3 புதிரின் விடை (3,3)


திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடித்தபின், அவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3- வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது படத்தின் 6-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
 
குறிப்பு:
 
இறுதி விடைக்கான திரைப்படம் (3,3) ; உலக நாயகனும் நடித்திருக்கிறார்.

 
சிவாஜி கணேசன் நடித்துள்ள படங்களின் பட்டியல் (தமிழில்) கீழே கண்ட வலைப்பிரிவில் காணலாம்.
 
விடைக்கான திரைப்படமும் சிவாஜி கணேசன் நடித்ததாக அமைந்துள்ளதை காணலாம்.

அனைத்து திரைப்படப் பெயர்களையும், (விடைக்கான திரைப்படத்தின் பெயர் உட்பட) பின்னூட்டமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

எழுத்துப் படிகள் - 15 க்கான குறிப்புகளின் விடைகள்:

1 . உடன்படிக்கை (6)                                        - ஒப்பந்தம்
2 . செல்வமா பிரியமா (3,3)                          - பணமா பாசமா
3 . திருமண அன்பளிப்பு (4,3)                         - கல்யாண பரிசு
4 . இனிய ஒலியெழுப்பும் காலணி (4,4) - கொஞ்சும் சலங்கை
5 . குறி கூறுபவளின் குமாரன் (4,3)         - குறத்தி மகன்
6 . வாழ்வு தந்த கடவுள் (2,3,4)                    - வாழ வைத்த தெய்வம்

இறுதி விடை: குணசுந்தரி

சரியான விடைகளை அனுப்பியவர்கள் :முத்து, Madhav, வைத்தியநாதன், பாலகணேஷ்


இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.

ராமராவ்

5 comments:

  1. முத்து,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி. .


    ReplyDelete
  2. பாலகணேஷ்,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  3. Madhav,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  4. நாகராஜன்,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.




    ReplyDelete
  5. வைத்தியநாதன்,

    உங்கள் விடைகள் எல்லாமே சரி. பாராட்டுக்கள். நன்றி.


    ReplyDelete