Tuesday, December 30, 2014

சொல் வரிசை - 74


சொல் வரிசை - 74  புதிருக்காக, கீழே   6  (ஆறு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.   யாரடி நீ மோகினி (--- --- --- --- உன் பார்வையில் விழுகிற பொழுது)
2.   சந்திப்பு (--- --- --- வர்ண மெட்டு நீதான் என் செல்லம்மா) 
3.   மது (--- --- --- --- ஊமை ஆனதா உந்தன் ஆசைகள்)
4.   அஞ்சான் (--- --- --- --- மனம் பஞ்சாகும் தன்னாலே)
5.   மணியோசை (--- --- --- --- வயசு வந்த பொண்ணை பார்த்து) 
6.   கைராசி (--- --- --- --- பார்த்திருந்த காலமெல்லாம் பழம்போல்) 
 
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து,  அவற்றில் முதல் சொற்களை மட்டும்  வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
 
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
 
குறிப்பு:  பாடல் இடம் பெற்ற திரைப்படத்தில் நயன்தாரா நடித்திருந்தார்.   
 
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

Saturday, December 27, 2014

எழுத்துப் படிகள் - 91


எழுத்துப் படிகள் - 91 க்கான அனைத்து திரைப்படங்களும்  சரத்குமார் நடித்தவை.   ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்  (6)  அஜித்குமார் கதாநாயகனாக நடித்தது. 
 
எழுத்துப் படிகள் - 91 க்கான திரைப்படங்களின் பெயர்கள் 
 
1.    வைத்தீஸ்வரன்                                                
2.    ஊர் மரியாதை                                                    
3.   அரவிந்தன்                                                 
4.    பச்சைக்கிளி முத்துச்சரம்                                                 
5.    தென்காசிப்பட்டணம்    

6.    சேரன் பாண்டியன்  
                                                            
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  6-வது படத்தின்  6-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 
 
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும் 
               
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும் 

ராமராவ் 

Monday, December 22, 2014

எழுத்துப் படிகள் - 90


எழுத்துப் படிகள் - 90 க்கான அனைத்து திரைப்படங்களும்  சிவாஜி கணேசன் நடித்தவை.   இறுதி விடைக்கான திரைப்படமும்  (7) சிவாஜி கணேசன் நடித்தது. 

 
எழுத்துப் படிகள் - 90 க்கான திரைப்படங்களின் பெயர்கள் 
 
1.     புதையல்                                               
2.     வாழ்விலே ஒரு நாள்                                                   
3.     தங்கப்பதுமை                                                
4.     இருவர் உள்ளம்                                                
5.     பெண்ணின் பெருமை   

6.     தில்லானா மோகனாம்பாள்       
7.     குலமா குணமா 
                                                            
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  7-வது படத்தின்  7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 
 
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்
 
குறிப்பு:  
 
1.   விடைக்கான  திரைப்படத்தின் தலைப்பிற்கும் தசாவதாரத்திற்கும் தொடர்புண்டு. 
                                  
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும் 

ராமராவ்