Thursday, February 21, 2013

எழுத்துப் படிகள் - 19




எழுத்துப் படிகள் - 19 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள்:

அனைத்து திரைப்படங்களும் சத்யராஜ் நடித்தவை
1 . தலையாய கெளரவம் (3,4)
2 . 100வது தினம் (4,2)
3 . ஜானகியின் நாயகனே (7)
4 . மூவதனம் (3,3)
5 . பாண்டியன் (3)
6 . சகோதரராயிருத்தல் (7)


திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடித்தபின், அவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3- வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது படத்தின் 6-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
 
குறிப்பு:
 
இறுதி விடைக்கான திரைப்படம் (3,3) ;
மீனா கதாநாயகியாக நடித்த திரைப்படம்.   
இதே பெயரில் ஜெமினி கணேசன், சாவித்திரி நடித்து ஒரு திரைப்படம் வந்துள்ளது.
சத்யராஜ் நடித்துள்ள படங்களின் பட்டியல் கீழே கண்ட வலைப்பிரிவில் காணலாம்.
விடைக்கான திரைப்படமும் சத்யராஜ் நடித்ததாக அமைந்துள்ளதை காணலாம்.

அனைத்து திரைப்படப் பெயர்களையும், (விடைக்கான திரைப்படத்தின் பெயர் உட்பட) பின்னூட்டமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

எழுத்துப் படிகள் - 18 க்கான குறிப்புகளின் விடைகள்:

1 . என்றும் அழியாத காப்பியம் (7)                                  - அமர காவியம்
2 . கல்வி கற்காதவன் (7)                                                      - படிக்காதவன்
3 . மிகச்சிறந்த மகன் (4,5)                                                      - உத்தம புத்திரன்
4 . வாழ்வு (4)                                                                              - வாழ்க்கை
5 . வரலாற்றுத் தலைவன் (5,4)                                         - சரித்திர நாயகன்
6 . அறிவு வெளிச்சம் (2,2)                                                    - ஞான ஒளி
7 . மத்தளம் கொட்டுவதில் மகாமன்னன் (5,8)         - மிருதங்க சக்கரவர்த்தி

இறுதி விடை: உனக்காக நான்

சரியான விடைகளை அனுப்பியவர்கள் : யோசிப்பவர், 10அம்மா, Suji, நாகராஜன்


இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.

ராமராவ்

Monday, February 18, 2013

எழுத்து வரிசை - 16



எழுத்து வரிசை புதிர் - 16 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:



1 அருள்நிதியின் அமைதியான ஆசான் (2,2)
2 விஜய்யின் இளமை (2)
3 பிரேம்ஜி அமரனின் நண்பா (2)
4 நரேன்! பிரசன்னாவைக்கண்டு பயப்படாதே (4)
5 ரஜினி வணங்கும் துர்காதேவி (3)
6 தமிழ் பாட்டி சுந்தராம்பாள் (4)
7 படைத்தலைவன் சத்யராஜ் (5)
 
இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் கடைசி எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும்.
 
அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.

குறிப்பு:
 
எழுத்து வரிசைக்கான விடை:
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நடித்த தேவர் பிலிம்ஸ் திரைப்படம் . (7). திரைப்படத்தின் பெயரில் 2-வது, 3-வது எழுத்துக்கள் மெய்யெழுத்துக்கள்.


அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னோட்டம் மூலமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.

எழுத்து வரிசை - 15 க்கான விடைகள்:


1 துரியோதனனின் மாமா கார்த்தி (3)                                            - சகுனி
2 வடிவேலு ஒரு சாளுக்கிய மன்னன்? (3,4,3,4)    - இம்சை அரசன் 23ம் புலிகேசி
3 காமதேவன் சிம்பு (5)                                                                    - மன்மதன்
4 பாண்டிராஜ் இயக்கிய பிள்ளைங்க? (4)                                      - பசங்க
5 ஜவஹர்லால் நேருவின் புதல்வி அனு ஹாசன்? (4)            - இந்திரா


எழுத்து வரிசை புதிர் விடை - கன்னிராசி

சரியான விடைகளை அனுப்பியவர்கள்:      Madhav, Suji, முத்து, நாகராஜன், வைத்தியநாதன், பாலகணேஷ்

இவர்கள் அனைவருக்கும். பாராட்டுக்கள். நன்றி.

ராமராவ்

Friday, February 15, 2013

சொல் வரிசை - 19



கீழே ஆறு திரைப்படங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.     அபியும் நானும்
2.     கோயம்புத்தூர் மாப்பிள்ளை
3.     குருதட்சணை
4.     பார்த்தால் பசி தீரும்
5.     மந்திரி குமாரி
6.     நானும் ஒரு பெண்

ஒவ்வொரு திரைப்படத்திலிருந்து ஒரு பாடலை தேர்ந்தெடுத்து அந்தப்
பாடல்களின் முதல் சொற்களை வரிசைப்படுத்தினால் மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.

அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு:



சொல் வரிசை விடைக்கான பாடல்: இச்சாதாரி பாம்புகள் பாடும் பாடல்
 

சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, அனைத்து திரைப்படங்களின் பெயர்கள், பாடல்களின் தொடக்க வரிகள், தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

* * * * * * * *
சொல் வரிசை - 18 க்கான விடைகள்:

திரைப்படம்                                                                       பாடலின் தொடக்கம்                                                       தொடக்கச் சொல்


1 . இருவர் மட்டும்                                           ரோஜா பூவின் மலர் வாசனை                               ரோஜா
2 . டாக்டர் சிவா                                               மலரே குறிஞ்சி மலரே                                           மலரே
3 . புள்ள குட்டிக்காரன்                                    ராஜகுமாரி இரத்தினபுரியில் இருந்தாளாம்           ராஜகுமாரி

4 . தூள்                                                             ஆசை ஆசை இப்பொழுது                                      ஆசை

5 . சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்          கிளியே கிளியே கீகீ கிளியே                                 கிளியே
6 . அன்னை                                                      அழகிய மிதிலை நகரினிலே                                 அழகிய
7 . சரஸ்வதி சபதம்                                          ராணி மகாராணி                                                    ராணி


மேலே உள்ள ஏழு தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்

ரோஜா மலரே ராஜகுமாரி
ஆசை கிளியே அழகிய ராணி


இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்:      வீரத்திருமகன்


எல்லா விடைகளையும் அனுப்பியவர் : Madhav

இவருக்கு நன்றி. பாராட்டுக்கள்.


திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.