எழுத்துப் படிகள் - 139 க்கான திரைப்படங்களும் சிவகுமார் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) எஸ்.எஸ்.ராஜேந்திரன் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 139 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. கண்ணுபடப் போகுதய்யா
2. கண்மணியே பேசு
3. மனிதனின் மறுபக்கம்
4. புதுவெள்ளம்
5. ஏணிப்படிகள்
6. கவிக்குயில்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்