Sunday, April 27, 2014

சொல் வரிசை - 64


சொல் வரிசை - 64 புதிருக்காக, கீழே   8 (எட்டு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.   குலமகள் ராதை (--- --- --- கண்களின் அழைப்பிலே)
2.   யார் நீ (--- --- --- பல்லாயிரம் சொல் வேண்டுமா) 
3.   என் அண்ணன் (--- --- --- --- நெஞ்சுக்கு தெரிகின்ற இந்த சுகம்)
4.   வீரபாண்டிய கட்டபொம்மன் (--- --- --- --- என்னை கண்டு மௌன மொழி)
5.   நீ வேணுண்டா செல்லம் (--- --- --- --- அக்கறைக்கு கொண்டு செல்ல)
6.   எங்க வீட்டுப் பெண் (--- --- --- --- சேர்ந்ததல்லவோ மனித ஜாதி)
7.   மாடி வீட்டு மாப்பிள்ளை (--- --- --- நீ நினைப்பதை காட்டும் முன்னாடி)
8.   நான் பெற்ற செல்வம் (--- --- --- எந்தன் வாழ்வும் மாறுமா)
  
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து,  அவற்றில் முதல் சொற்களை மட்டும்  வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.

அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
சொல் வரிசை - 63 க்கான விடைகள்:

திரைப்படம்                                பாடலின் தொடக்கம்
1.   காத்திருந்த கண்கள்  (வா என்றது உருவம் நீ போ என்றது நாணம்)
2.   செல்வ மகள்  (வெண்ணிலா முகம் குங்குமம் தரும் நல்ல நாள் தரும் மங்கலம் வரும்) 
3.   ஆயிரத்தில் ஒருவன்  (உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்)
4.   தைப்பொங்கல்  (தானே சதிராடும் மாலை வெயில் வேளை)
5.   அல்லி  (வானம் நிலவை மறந்தது மறந்தது அது மலராய் பூமியில் பிறந்தது பிறந்தது)
6.   உன்னை கண் தேடுதே (தேடுதே உன்னை கண் தேடுதே உயிரின் பாதியே உனை கண் தேடுதே)
மேலே உள்ள தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்
வா வெண்ணிலா உன்னை தானே வானம் தேடுதே 
 
இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்: மெல்லத் திறந்தது கனவு 
சரியான  விடைகளை அனுப்பியவர்கள் : 
 
1.    முத்து சுப்ரமண்யம்   
2.    மாதவ் மூர்த்தி 
 
இவர்கள் இருவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  


ராமராவ்

Thursday, April 24, 2014

எழுத்துப் படிகள் - 71


எழுத்துப் படிகள் - 71 க்கான அனைத்து திரைப்படங்களும்   சிவாஜி  கணேசன் நடித்தவை.    ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்  (3,4) எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்தது. 

எழுத்துப் படிகள் - 71 க்கான திரைப்படங்களின் பெயர்கள் 
 
1.     மரகதம்                               
2.    சாரங்கதாரா                               
3.    திருவிளையாடல்                             
4.    அவன்தான் மனிதன்                               
5.    வடிவுக்கு வளைகாப்பு                       
         
6.    வம்ச விளக்கு 
7.    ராஜபார்ட் ரங்கதுரை  
 
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  7-வது படத்தின்  7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்
 
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்   

குறிப்பு: 
விடைக்கான திரைப்படத்தில் எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவியும், ஜெயலலிதாவும் ஜோடிகளாக நடித்திருந்தார்கள்.
 
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
 
எழுத்துப் படிகள் - 70 க்கான திரைப்படங்களின் பெயர்கள்:
 
1.    இரு கோடுகள்                              
2.    சங்கமம்                              
3.    தாமரை நெஞ்சம்                            
4.    கற்புக்கரசி                              
5.    மாயா பஜார்                      
         
6.    கடன் வாங்கி கல்யாணம் 
 
இறுதி விடை:          மாமன் மகள்                   
 
சரியான விடைகளை அனுப்பியவர்கள் :
 
1.     சுஜி 
2.    மாதவ் மூர்த்தி
3.    முத்து  சுப்ரமண்யம்   
4.    நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் 
     
இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.

ராமராவ்