Saturday, December 28, 2013

சொல் அந்தாதி - 14

 

சொல் அந்தாதி   14    புதிருக்காக, கீழே   (ஐந்து ) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியும் கொடுக்கப்பட்டுள்ளன.

 
1.  கை கொடுத்த தெய்வம் -  ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ    
 
2.  நாயகன்                       
 
3.  கை வரிசை             
 
4.  கூட்டுப் புழுக்கள்              

5.  கடவுள் அமைத்த மேடை               
 
             
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில்/ இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 
   
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது  திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டுபிடித்து அனுப்ப வேண்டும்.
 
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
 
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
* * * * * * * *
சொல் அந்தாதி  13 புதிருக்கான விடைகள்:  
 
1.  நெஞ்சிருக்கும் வரை -  முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்   
 
2.  உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்  - என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி                     
 
3.  ஜன்னல் ஓரம் - என்னடி என்னடி ஓவியமே உன்னை வரைந்தது யார்            
 
4.  பாச மலர் - யார் யார் யார் அவள் யாரோ ஊர் பேர் தான் தெரியாதோ             

5.  ரெண்டு  - யாரோ எவளோ என்று தெரியவில்லை              
 
       
சரியான விடைகளை அனுப்பியவர்கள்:   

1. முத்து சுப்ரமண்யம்
2. மாதவ் மூர்த்தி
3. மதுமதி விட்டல்ராவ்

இவர்கள்  அனைவருக்கும்  பாராட்டுக்கள்.  நன்றி.      
 
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

Saturday, December 21, 2013

சொல் வரிசை - 52

 

சொல் வரிசை - 52   புதிருக்காக, கீழே  6 (ஆறு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.   தாயை காத்த தனயன் (--- --- --- --- காதல் என்னும் சாறு பிழிந்து)
2.   சிநேகிதி  (--- --- --- --- தனிமை காண முடியுமா)
3.   படிக்காதவன் (--- --- --- எனக்கு மந்திரிங்க யாருமில்லே)
4.   காயத்ரி (--- --- --- --- காதல் நினைவில் வாடும் இதழ்கள்)
5.   பொண்ணுக்கு தங்க மனசு (--- --- --- இதுதானே உறவு நேரம்)
6.   குமுதம் (--- --- --- உங்கள் கண்ணான பொன் மயிலும் சௌக்கியமா)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து,  அவற்றில் முதல் சொற்களை மட்டும்  வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.


அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:


விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *

சொல் வரிசை - 51 க்கான விடைகள்:


திரைப்படம்                                பாடலின் தொடக்கம்  
1.   மறுபிறவி (சொந்தம் இனி உன் மடியில் சொர்க்கம் இனி உன் அழகில்)
2.   சாமிடா (ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டோம் கண்களாலே கைது செய்தோம்)
3.   கழுகு (தேடும் தெய்வம் நேரில் வந்தது மனம் காணும் இன்பம் யோகம் என்றது)
4.   ஆடு புலி (அன்னக்கிளி உட்காரும் ஆலம் விழுது ஆடிக்காற்றில் கூத்தாடும் அந்திப்பொழுது)
5.   உழவன் மகன் (சொல்லி தரவா சொல்லி தரவா இடை மூடும் மேலாடை தடை அல்லவா)
6.   சிறைப் பறவை (சொல்லி தாரேன் நீயும் செய்வியா ஒண்ணும் தெரியாத மாமா)
7.   நாடோடி (பாடும் குரல் இங்கே பாடியவன் எங்கே தேடும் விழி இங்கே)
8.   அன்னக்கிளி (அன்னக்கிளி உன்னைத் தேடுதே ஆறு மாசம் ஒரு வருஷம் ஆவாரம்பூ மேனி)
 
மேலே உள்ள தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்
சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி  
சொல்லி சொல்லி பாடும் அன்னக்கிளி                       

இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்:        என்னப் பெத்த ராசா         

சரியான  விடைகளை அனுப்பியவர்கள் : 


1.  மாதவ் மூர்த்தி 
2.  முத்து சுப்ரமண்யம்   
3.  மதுமதி விட்டல்ராவ் 


இவர்கள் எல்லோருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.


திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.