Thursday, February 13, 2014

சொல் வரிசை - 57


சொல் வரிசை - 57 புதிருக்காக, கீழே  8 (எட்டு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.   இதய வீணை (--- --- --- மெல்ல சிரித்தால் என்ன)
2.   சந்திப்பு (--- --- --- நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு) 
3.   பூட்டாத பூட்டுக்கள் (--- --- --- --- ஆசைக்கு ஓர் பிள்ளை தான் வந்தது)
4.   கிழக்கு வாசல் (--- --- --- தந்ததே ஓ சம்மதம்)
5.   காதலுக்கு மரியாதை (--- --- --- தினம் எங்களின் வீட்டுக்குள்ளே)
6.   என் ராசாவின் மனசிலே (--- --- --- வந்ததென்ன இளமானே)
7.   இளமைக் காலங்கள் (--- --- --- --- சுகராகம் பொழியும்)
8.   மாடி வீட்டு மாப்பிள்ளை (--- --- --- --- பாட்டுப் பாடு காளை என்னோடு)
  
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து,  அவற்றில் முதல் சொற்களை மட்டும்  வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
 
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
சொல் வரிசை - 56 க்கான விடைகள்:

திரைப்படம்                                பாடலின் தொடக்கம்
1.    பருவராகம்  (பூவே உன்னை நேசித்தேன் பூக்கள் கொண்டு பூசித்தேன்) 
2.   ஆனந்த ஜோதி (பனி இல்லாத மார்கழியா படை இல்லாத மன்னவரா) 
3.   ஒன்ஸ் மோர் (பூவே பூவே பெண் பூவே என் பூஜைக்கு வரவேண்டும்)
4.   தண்டிக்கப்பட்ட நியாயங்கள் (நானும் நீயும் சேர்ந்து எழில் வானம் போல வாழ்ந்து)
5.   சொல்லத்தான் நினைக்கிறேன் (மலர் போல் சிரிப்பது பதினாறு  மனம் போல் பறப்பது)
6.   நினைத்ததை முடிப்பவன் (தானே தானே தன்னான தானே தானே உன் மேனி தள்ளாடலாமா)
 
மேலே உள்ள தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்
பூவே பனிப் பூவே நானும் மலர் தானே                         

இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்:   நிலவு சுடுவதில்லை        

சரியான  விடைகளை அனுப்பியவர்கள் : 

1.   முத்து சுப்ரமண்யம்   
2.   மாதவ் மூர்த்தி 
 
இவர்கள் இருவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  



 
ராமராவ்

Monday, February 10, 2014

எழுத்துப் படிகள் - 60



எழுத்துப் படிகள் - 60 க்கான அனைத்து திரைப்படங்களும்  சிவாஜி கணேசன் நடித்தவை.  இறுதி விடைக்கான திரைப்படமும்   (4,3)  சிவாஜி கணேசன் நடித்ததே. 
 
எழுத்துப் படிகள் - 60 க்கான திரைப்படங்களின் பெயர்கள்
 
1.   தங்கப்பதுமை                   
2.  கந்தன் கருணை                     
3.  அண்ணன் ஒரு கோவில்                   
4.  மண்ணுக்குள் வைரம்                   
5.  பெற்ற மனம்            
         
6.  தாவணிக்கனவுகள் 
7.  அஞ்சல் பெட்டி 520     
           
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  7-வது படத்தின்  7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்   

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
 
எழுத்துப் படிகள் - 59 க்கான திரைப்படங்களின் பெயர்கள்:
 
 
1.   உருவங்கள் மாறலாம்                  
2.  அபூர்வ ராகங்கள்                    
3.  ஆளவந்தான்                  
4.  அவள் ஒரு தொடர்கதை                  
5.  இதய மலர்           
         
6.  தேன் சிந்துதே வானம்     
      

இறுதி விடை:          தேவர் மகன்          
 
 
சரியான விடைகளை அனுப்பியவர்கள் :
 
1. சுஜி 
2. மாதவ் மூர்த்தி
3. முத்து சுப்ரமண்யம்        
 
இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.

ராமராவ்