Friday, January 11, 2019

எழுத்துப் படிகள் - 249




எழுத்துப் படிகள் - 249 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்   கார்த்திக்  நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்  (6)  கமலஹாசன் கதாநாயகனாக  நடித்தது.  


 


எழுத்துப் படிகள் - 249  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.   அனேகன்           

2.   நினைவெல்லாம் நித்யா          

3.   எங்க வீட்டு ராமாயணம்           

4.   கோகுலத்தில் சீதை       

5.   சந்தித்த வேளை                   

6.   இளைஞர் அணி  

    
    
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

Friday, January 4, 2019

சொல் அந்தாதி - 112



சொல் அந்தாதி - 112   புதிருக்காக, கீழே  5 (ஐந்து)  திரைப்படங்களின்   பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்  கொடுக்கப்பட்டுள்ளன.



1. மீண்டும் சாவித்திரி - இந்த நாள் ஓர் நல்ல
2. துரை               
3. எங்க தம்பி          
4. வீடு மனைவி மக்கள்       
5. விருதகிரி          
  
          
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப்  பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்    பின்னூட்டம்  மூலமாக  மட்டும்  அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள்  உதவும்.

http://thiraitamilpaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.google.com

ராமராவ்

Wednesday, January 2, 2019

சொல் வரிசை - 200



சொல் வரிசை - 200   புதிருக்காக, கீழே        பதினான்கு (14)  திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்   (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   நான் சொல்லும் ரகசியம் (---  ---  கண்ணாலே காதல் ஜோதியே)
  
2.   மாசி(---  --- தேவதையை நெஞ்சில் கொண்டேனே)
   
3.   அன்புக்கு நான் அடிமை(---  ---  சிங்கக்குட்டியாம்) 

4.   இது எப்படி இருக்கு(---  ---  இயற்கையில் என்ன சுகமோ)  

5.   ஆசை ஆசையாய்(---  ---  --- கண்கள் அதில் பாடமாகும்)

6.   மீனவ நண்பன் (---  ---  தண்ணீரிலே ஓடங்களை) 

7.   கொக்கரக்கோ(---  ---  நீதானே என் காதல் வேதம்) 

8.   கிளிப்பேச்சு கேட்கவா(---  ---  நெஞ்சினில் நின்றது யாரடி)

9.   நான் பெற்ற செல்வம்(---  ---  --- எந்தன் வாழ்வும்  மாறுமா) 

10.   பிச்சைக்காரன்(---  ---  --- அம்மா உன்னைப் போல் ஆகிடுமா)  

11.   என் தங்கை கல்யாணி(---  ---  --- மோகம் பிறக்குது வாடி)

12.   பரியேறும் பெருமாள்(---  ---  --- இங்கு நானும் நான் துவங்க) 

13.   உயிருள்ளவரை உஷா(---  ---  --- வந்து என்னை அழைக்க) 

14.   மக்களை பெற்ற மகராசி(---  ---  ---  --- சொந்தமுள்ள மச்சான்னு)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்     முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல் இடம்  பெற்ற  திரைப்படத்தின்  பெயரையும்   கண்டு பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  



http://thiraitamilpaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்