எழுத்துப் படிகள் - 100 க்கான அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும் (6,4) சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்ததே.
எழுத்துப் படிகள் - 100 க்கான திரைப்படங்களின் பெயர்கள்
1. தங்கமலை ரகசியம்
2. என்னைப்போல் ஒருவன்
2. என்னைப்போல் ஒருவன்
3. கந்தன் கருணை
4. தேவர் மகன்
5. மன்னவரு சின்னவரு
5. மன்னவரு சின்னவரு
6. விளையாட்டுப்பிள்ளை
7. கலாட்டா கல்யாணம்
8. சிவகாமியின் செல்வன்
9. எல்லாம் உனக்காக
10. வாணி ராணி
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 10-வது படத்தின் 10-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு:
1. விடைக்கான திரைப்படத்தின் பெயரில் முதல் சொல்லில் ஒரு பெண்ணின் பெயர் இருக்கும்; இரண்டாவது சொல் ஒரு குடும்ப உறவைக் குறிக்கும்.
2. திரைப்படத்தில் சிவாஜி கணேசனின் ஜோடியாக நடித்தவர்: சரோஜாதேவி.
1. விடைக்கான திரைப்படத்தின் பெயரில் முதல் சொல்லில் ஒரு பெண்ணின் பெயர் இருக்கும்; இரண்டாவது சொல் ஒரு குடும்ப உறவைக் குறிக்கும்.
2. திரைப்படத்தில் சிவாஜி கணேசனின் ஜோடியாக நடித்தவர்: சரோஜாதேவி.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்