Wednesday, February 5, 2014

எழுத்துப் படிகள் - 59



எழுத்துப் படிகள் - 59 க்கான அனைத்து திரைப்படங்களும்  கமலஹாசன்  நடித்தவை.  இறுதி விடைக்கான திரைப்படமும்   (3,3) கமலஹாசன்  நடித்ததே. 
 
எழுத்துப் படிகள் - 59 க்கான திரைப்படங்களின் பெயர்கள்
 
1.   உருவங்கள் மாறலாம்                  
2.  அபூர்வ ராகங்கள்                    
3.  ஆளவந்தான்                  
4.  அவள் ஒரு தொடர்கதை                  
5.  இதய மலர்           
         
6.  தேன் சிந்துதே வானம்     
           
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  6-வது படத்தின்  6-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்   

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
 
எழுத்துப் படிகள் - 58 க்கான திரைப்படங்களின் பெயர்கள்:
 
1.  பகலில் பௌர்ணமி                 
2.  தங்கைக்கோர் கீதம்                   
3.  பூவும் புயலும்                 
4.  அன்னக்கிளி                 
5.  சாமந்திப்பூ          
         
6.  பணத்துக்காக      

இறுதி விடை:          அகத்தியர்         
 
சரியான விடைகளை அனுப்பியவர்கள் :
 
1. முத்து சுப்ரமண்யம்      
2. மாதவ் மூர்த்தி  
 
இவர்கள் இருவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.

ராமராவ் 

Sunday, February 2, 2014

சொல் வரிசை - 56


சொல் வரிசை - 56 புதிருக்காக, கீழே  6 (ஆறு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.   பருவராகம் (--- --- --- பூக்கள் கொண்டு பூசித்தேன்)
2.   ஆனந்த ஜோதி (--- --- --- படை இல்லாத மன்னவரா) 
3.   ஒன்ஸ் மோர் (--- --- --- --- என் பூஜைக்கு வரவேண்டும்)
4.   தண்டிக்கப்பட்ட நியாயங்கள் (--- --- --- எழில் வானம் போல வாழ்ந்து)
5.   சொல்லத்தான் நினைக்கிறேன் (--- --- --- --- மனம் போல் பறப்பது)
6.   நினைத்ததை முடிப்பவன் (--- --- --- --- தானே உன் மேனி தள்ளாடலாமா)
 
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து,  அவற்றில் முதல் சொற்களை மட்டும்  வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
 
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
சொல் வரிசை - 55 க்கான விடைகள்:

திரைப்படம்                                பாடலின் தொடக்கம்
1.   சங்கர்லால் (--- --- --- பலர் கண் பார்வையில் இன்று)
2.   உடன் பிறப்பு (--- --- --- --- தேனே தென்மண்டலத்து ராஜ விளக்கே)
3.   புதுப்புது அர்த்தங்கள் (--- --- --- --- என் பாட்டை கேளு உண்மைகள்)
4.   உள்ளம் கவர்ந்த கள்வன் (--- --- --- --- மலரும் பூவே வளரும்  காற்றே)
5.   கச்சேரி ஆரம்பம் (--- --- --- --- கண்ணாலே என்னை நீ பார்த்தா)
6.   உதய கீதம்  (--- --- தேன் கவிதை பூ மலர)
 
மேலே உள்ள தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்
கஸ்தூரி மானே கல்யாண தேனே      
கச்சேரி பாடு                            

இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்:     புதுமைப்பெண்       

சரியான  விடைகளை அனுப்பியவர்கள் : 

1.   முத்து சுப்ரமண்யம்   
2.   மாதவ் மூர்த்தி 
 
இவர்கள் இருவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  



 
ராமராவ்