Thursday, August 8, 2013

எழுத்துப் படிகள் - 35



எழுத்துப் படிகள் - 35 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள்:

அனைத்து திரைப்படங்களும்   சிவாஜி கணேசன் நடித்தவை.   இறுதி விடைக்கான  திரைப்படமும்  (7)   சிவாஜி கணேசன் நடித்ததே.  
 
மேலும் வழக்கமான குறிப்புகளுடன்,   அந்த திரைப்படங்கள் வெளியான வருடங்களும் அடைப்புக் குறிகளுக்குள்   கொடுக்கப்பட்டிருக்கும்.   
 
1.    துறவறம் பூண்ட மன்னன்   (4)                                                                                (1985)  
2.     சின்னத்திரையில் ராதிகாவின் நெடுந்தொடர்  (2,2)                                      (1974)           
3.     சிறந்த இல்லம்    (3,2)                                                                                                      (1956)
4.    தொடர்ச்சியான விலங்கு   (4)                                                                                   (1982)
5.    திருமணத்தை உறுதிப்படுத்தும் சடங்கு  (4,5)                                                   (1962)    
6.    நீதி எவ்விடம்?   (4,3)
                                                                                                      (1972)
7.     பள்ளி மாணவர்களுக்கு ஓலைச்சுவடி நூல்களைச் சுமப்பவன்   (7)  (1954)
         
திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடித்தபின்,  இதே  வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3- வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  7-வது படத்தின் 7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்
    
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்
 
குறிப்பு:
 
இறுதி விடைக்கான திரைப்படத்தில்  பானுமதி  ஜோடியாக  நடித்திருந்தார். 


அனைத்து திரைப்படப் பெயர்களையும், (விடைக்கான திரைப்படத்தின் பெயர் உட்பட) பின்னூட்டமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

எழுத்துப் படிகள் 34 க்கான குறிப்புகளின் விடைகள்:
 
1.    கண்டால் வயிறு நிறையும்  (5,2,3)        (1962)        -  பார்த்தால் பசி தீரும்  
2.    மன்னனின் ஆணை   (3,4)                            (1967)        - அரச கட்டளை     
3.     பாய்ந்து செல்லும் ஆறு   (3,2)                   (1969)       -` ஓடும் நதி 
4.    கல்யாண மேடை   (7)                                    (1961)       - மணப்பந்தல் 
5.    பங்கு பகிர்ந்தளித்தல்  (7)                            (1959)       - பாகப்பிரிவினை 
6.    மாங்கல்ய அதிர்ஷ்டம்  (2,5)
                       (1966)       - தாலி பாக்கியம் 
7.     ஐநூறாயிரம்  (3,4)                                             (1969)       - ஐந்து லட்சம் 
 
 
 
இறுதி விடை:    பாரம்பரியம்      
         
 
சரியான விடைகளை அனுப்பியவர்கள் :  Madhav,  10அம்மா, முத்து, வைத்தியநாதன், மதுமதி, நாகராஜன்         
 
 
இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.
 
ராமராவ்

Tuesday, August 6, 2013

சொல் வரிசை - 35



கீழே   9 (ஒன்பது)  திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும்  (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.   அவசரக்காரி                                             ( ------  பார்த்த கண்ணாடி ரசம் போனதெப்போது )
2.   வேட்டைக்காரன்                      (  ------  சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே )
3.   நாயகன்                                       ( -------  அது வானத்து மேலே )
4.   அயன்                                            (  -------  மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் )
5.   நிறம் மாறாத பூக்கள்              ( --------  பறவைகள் மலை முழுவதும் இங்கே கலந்தன) 
6  இந்திரா                                        ( -------- காய்கிறது நிதம் தேய்கிறது )
7.    பையா                                           ( -------- மழைடா அடைமழைடா )
8.   பிள்ளையோ பிள்ளை             ( --------  தமிழ் தோன்றியது உன்னிடமோ) 
9  செம்பருத்தி                                ( -------- காயும் நேரம் சரணம் ) 
 
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து,  அவற்றை  வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
 
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

குறிப்பு:
 
பாடல் காட்சியில் ராமராஜன்  சீதாவுடன் ஜோடி சேர்ந்து நடித்தது.   
 
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
 
விடைகள் அனுப்பும் போது,  சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

* * * * * * * *
சொல் வரிசை - 34 க்கான விடைகள்:
திரைப்படம்                                     பாடலின் தொடக்கம்                                 

1.    கன்னிப் பருவத்திலே                  ( பட்டு வண்ண ரோசாவாம் பாத்தா கண்ணு மூடாதாம்)
2.    நிச்சய தாம்பூலம்                        ( பாவாடை தாவணியில் பார்த்த உருவமா)
3.    குமரிக் கோட்டம்                        ( எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலால் ஓடிவா)
4.    என் ஜீவன் பாடுது                       ( கட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனச )
5.    போஸ்                                         ( வைத்த கண் வைத்தது தானோடி) 
6   பரிசு                                             ( கூந்தல் கருப்பு குங்குமம் சிவப்பு )
7.    கல்லும் கனியாகும்                   ( எங்கே நான் வாழ்ந்தாலும் என்னுயிரோ பாடலிலே )
 
 
மேலே உள்ள தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்

பட்டுப் பாவாடை எங்கே   
கட்டி வைத்த கூந்தல் எங்கே                  

இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்:      பறக்கும் பாவை          
 
எல்லா விடைகளையும் அனுப்பியவர்கள்  : Madhav, முத்து, 10அம்மா, மதுமதி, வைத்தியநாதன்.        

இவர்கள் எல்லோருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.


திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.